
மக்களை வதைக்கும் பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து புதிய பார்வை கூட்டணி கண்டன ஆர்ப்பாட்டம் , சேப்பாக்கம் விருந்தினர் விடுதி அருகே இன்று நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக முற்போக்கு மக்கள் கட்சி தலைவர் மற்றும் புதிய பார்வை அணியின் முதலமைச்சர் வேட்பாளர் க. சக்திவேல் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தேசிய மக்கள் சக்தி கட்சி உடைய தலைவர் எம் எல் ரவி இந்திய திராவிட மக்கள் முன்னேற்ற கட்சி தலைவர் வீரா சிதம்பரம் நேர்மை மக்கள் இயக்கத் தலைவர் வழக்கறிஞர் ஞானசம்பந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.
1.மத்திய மாநில அரசுகளே பெட்ரோல் டீசல் சமையல் கேஸ் சிலிண்டர் விலையை குறைத்திடு.
புதிய பார்வை கூட்டணி
- மத்திய மோடி அரசே மக்கள் விரோத சமையல் எரிவாயு விலை ஏற்றத்தை ரத்து செய்
புதிய பார்வை கூட்டணி
- தமிழக அரசே பெட்ரோல் டீசலுக்கு மதிப்பு கூட்டு வரியை ரத்து செய்
புதிய பார்வை கூட்டணி
- மக்களை வதைக்கும் கேஸ் சிலிண்டர் விலை உயர்வை ரத்து செய்
புதிய பார்வை கூட்டணி
- புதிய பார்வை கூட்டணி வெல்லட்டும் வெல்லட்டும்.
- பெட்ரோல் டீசல் விலை உயர்வை எதிர்த்து
புதிய பார்வை கூட்டணி போராட்டம்
ஆகிய கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக முற்போக்கு மக்கள் கட்சி செயலாளர் வழக்கறிஞர் பிரபாகரன் செயலாளர் கோவிலம்பாக்கம் இமானுவேல், பொருளாளர் மதன், மகளிர் அணி பொறுப்பாளர் காஞ்சனா, தேசிய மக்கள் சக்தி கட்சி செயலாளர் தனசேகர், இந்திய திராவிட மக்கள் முன்னேற்றக் கட்சி துணைத்தலைவர் நாகபூஷணம், ஆகியோர் கலந்து கொண்டனர். காலை 11 மணிக்கு துவங்கிய ஆர்ப்பாட்டம் 12 மணிக்கு நிறைவுற்றது.
வழக்கறிஞர் பிரபாகரன் செயலாளர்,