
தமிழர்களுக்கு நிறைவான மகிழ்ச்சியை தரும் ஆண்டாக
2021ம் ஆண்டு அமைந்திட வேண்டும்.
தமிழக முற்போக்கு மக்கள் கட்சித் தலைவர்
க.சக்திவேல்
புத்தாண்டு வாழ்த்து செய்தி.
2020ஆம் ஆண்டு கசப்பான ஆண்டாக உலகம் முழுவதும் மக்களுக்கு அமைந்துவிட்டது.. கொரொனா கால ஊரடங்கு, பயம் உலகம் முழுவதும் மனிதர்களை நிலைகுலைய செய்துவிட்டன. சுனாமி தந்த படிப்பினை, அதற்கு பின்னர் ஏற்பட்ட பல்வேறு புயல்களோடு இந்த கொரோனாவும் புதிய புதிய படிப்பினைகளை தமிழக மக்களுக்கு தந்தது. இதன் காராணமாக, தமிழகமும் மக்களும் எதையும் எதிர்கொள்ளும் ஆற்றலை பெற்று உள்ளார்கள்.
இருப்பினும், இந்த சோதனைகளை எதிர்கொள்ள இன்னும் வலுவான அரசியல் தலைமை தமிழகத்திற்கு தேவைப்படுகிறது என்பது நமக்கான படிப்பினைகள் தந்து உள்ளன.. தமிழகத்தில் நிலவி வரும் வறுமையும் வேலையற்ற தன்மையும் முழுமையாக நீக்கப்பட உறுதி மேற்கொள்ள வேண்டிய தருணம் இது.. இவை எல்லாவற்றிற்கும் தீர்வாக 2021 சட்டமன்ற தேர்தல் அமையுமென நம்புவோம்.
தமிழர் வாழ்வியலில் புதிய நம்பிக்கை விதையை தூவிட 2021 ஆண்டு விளங்கிடும் என்ற எதிர்பார்ப்புடன் 2021 ஆம் ஆண்டை வரவேற்று தமிழக முற்போக்கு கட்சி சார்பாக வாழ்த்துக்ககளை தெரிவித்துக்கொள்கிறேன்.
க.சக்திவேல்,
தலைவர்
தமிழக முற்போக்கு மக்கள் கட்சி.