
3-7-2023
பத்திரிக்கை செய்தி
தென் பெண்ணை தீர்ப்பாயம் அமைக்க வேண்டுமென்பதில்
தமிழக அரசு உறுதியாக இருக்க வேண்டும்.
இடையூறு செய்திடும் கர்நாடகத்தோடு எந்த பேச்சு வார்த்தையும் கூடாது.
தமிழக முற்போக்கு மக்கள் கட்சி தலைவர்
க. சக்திவேல் அறிக்கை
தென்பெண்ணை ஆற்றுநீர் சிக்கலைத் தீர்ப்பதற்கான தீர்ப்பாயத்தை ஜூலை 5க்குள் அமைப்பதாக உச்ச நீதிமன்றத்தில் இந்திய அரசு உறுதியளித்துள்ள நிலையில், அந்த தீர்ப்பாயம் கூடாது என்கிற கர்நாடக காங்கிரஸ் அரசு பேச்சு வார்த்தை என்ற பெயரில் திசை திருப்பப் பார்க்கிறது.
காவிரி பிரச்சனையில் எப்படி கர்நாடகம் தமிழகத்தை பல்லாண்டு காலம் வஞ்சித்து வந்ததோ அதே நடைமுறையில் இப்போது கர்நாடக காங்கிரஸ் அரசு கடைபிடித்து தென்பெண்ணை ஆற்று நீரை தமிழகம் பெறக்கூடாது என்பதில் கர்நாடக அரசு முனைப்பாக உள்ளது.
தென்பெண்ணை ஆற்றின் நீரை பெறுவதில் தமிழகத் திமுக அரசு உறுதியாக இருந்தால் அதன் கூட்டணி கட்சியாக இருக்க கூடிய காங்கிரஸ் கட்சியின் டெல்லி தலைமையிடம் கூறி தென்பெண்ணை தீர்ப்பாயத்தை கர்நாடகா காங்கிரஸ் அரசு ஏற்றுக்கொள்ள செய்ய வேண்டும். கூட்டணி கட்சிக்கு தர்ம சங்கடம் வேண்டாம் என்று எண்ணி கர்நாடக காங்கிரஸ் அரசின் வேண்டுகோளை ஏற்று, தென்பெண்ணை தீர்ப்பாயம் அமைப்பதில் கர்நாடகத்தோடு பேசி தீர்த்துக் கொள்வோம் என்று செயல்பட்டால் அது தமிழகத்திற்கு செய்யும் மிகப்பெரிய துரோகம் ஆகும். அது மட்டுமின்றி,
அது தமிழகத்தின் உரிமையை தாரை வார்த்தைக்கு சமமாகும்.
கர்நாடக மாநிலத்தில் மார்க்கண்டேய ஆற்றின் குறுக்கே புதிய அணை கட்டுவதை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த வழக்கின் காரணமாக உச்சநீதிமன்றத்தின் ஆணைப்படி ஜூலை 5க்குள் அமைக்கப்பட வேண்டும். மத்திய அரசும் ஏற்றுக் கொண்டு ஜூலை 5 க்குள் அமைப்பதாக கூறியுள்ளது.
இந்நிலையில் கர்நாடகா காங்கிரஸ் அரசு எப்படியாவது தென்பெண்ணை தீர்ப்பாயத்தை அமைப்பதை தவிர்க்க பேச்சுவார்த்தை என்ற பெயரில் மார்க்கண்டேயத்தில் அணைக் கட்ட முழு முயற்சியை எடுத்து தமிழகத்தை வஞ்சிக்க பார்க்கிறது கர்நாடக அரசு.
இதற்கு எந்த வகையிலும் அனுமதிக்காமல் தமிழக அரசு தென்பெண்ணை தீர்ப்பாயம் அமைப்பதில் மத்திய அரசை வலியுறுத்துவதிலும் மத்திய அரசு உச்சநீதிமன்ற ஆணைப்படி அமைக்காவிட்டால் மீண்டும் நீதிமன்றத்தை நாடுவதற்கும் தயங்க கூடாது என தமிழக அரசை தமிழக போக்கு மக்கள் கட்சி கேட்டுக் கொள்கிறது.
(க.சக்திவேல்)
WhatsApp: 9345099448