
பத்திரிக்கை செய்தி 05-10-2023
காவிரியில் தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய, கர்நாடக அரசுகளை கண்டித்தும் தீர்வு காணாத தமிழக அரசை கண்டித்தும் பட்டுக்கோட்டையில் 6-10-2023 அன்று கண்டன ஆர்ப்பாட்டம்
தமிழக முற்போக்கு மக்கள் கட்சியும் தமிழர் அறமும் இணைந்து 06-10-2023 ( வெள்ளிக்கிழமை) மாலை 4 மணிக்கு காவிரியில் தமிழகத்தின் உரிமையை மறுக்கும் மத்திய, கர்நாடக அரசுகளை கண்டித்தும் தீர்வு காணாத தமிழக அரசை கண்டித்தும் பட்டுக்கோட்டை தலைமை அஞ்சலகம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழர் அறம் நிறுவனத் தலைவர் சி.இராமசாமி தலைமையில் , தமிழக முற்போக்கு மக்கள் கட்சித் தலைவர் க.சக்திவேல் கணடன உரையாற்றுகிறார்.
பட்டுக்கோட்டை வழக்கறிஞர் சங்க முன்னாள் தலைவர் பிரகாசம் முன்னிலை வகிக்க, தாளாண்மை உழவர் இயக்க அமைப்பாளர் பொறியாளர் திருநாவுக்கரசு ,கம்யூனிஸ்ட் மா.லெ. மக்கள் விடுதலை பொதுச்செயலாளர் க.சி.விடுதலைக்குமரன், தமிழக மக்கள் புரட்சிக் கழகத் தலைவர் அரங்க.குணசேகரன், தமிழ்த் தேசிய உணர்வாளர் கூட்டமைப்பு தோழர்கள் செ.கர்ணன்,இளஞ்சென்னியன், செல்வராசு, தமிழின உணர்வாளர்கள் த.குமார், சி.கணேசன், கம்யூனிஸ்ட் மா.லெ. மக்கள் விடுதலை மாவட்ட செயலாளர் இரா.அருணாசலம், தமிழக முற்போக்கு மக்கள் கட்சி மாநில அமைப்பாளர்கள் ஆண்டிக்காடு செந்தில், சுந்தரமூர்த்தி, தமிழர் அறம் சோமை.சூர்யமூர்த்தி கலந்துக் கொண்டு கணடன உரையாற்றுகிறார்கள்.
இப்படிக்கு
வழக்கறிஞர் பிரபாகரன்,
பொதுச்செயலாளர்
தமிழக முற்போக்கு மக்கள் கட்சி
WhatsApp:9345099498
www.tmmkatchi.com