26-02-2024 அன்று நடைபெற்ற தமிழர் நீர் உரிமை மாநாட்டு தீர்மானங்கள்

தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின் தலைவர் க.சக்திவேல் தலைமையில் நடைபெற்ற மேகதாது அணையை தடுப்போம் தமிழர் நீர் உரிமை காப்போம் என்ற முழக்கத்தோடு காவிரி டெல்டாவை பாதுகாத்திட நடைபெற்ற தமிழர் நீர் உரிமை மாநாட்டில்,   தேசிய மக்கள் சக்தி கட்சி த் தலைவர் எம்.எல்.இரவி, தமிழ் தன்னுரிமை இயக்கத் தலைவர் பாவலர் ராமச்சந்திரன், தமிழர் அறம் பட்டுக்கோட்டை ராமசாமி, தமிழ் விவசாயிகள் சங்கத் தலைவர் O. A. நாராயணசாமி,   உழவர் உழைப்பளர் சங்கத் தலைவர்  வேல்முருகன்,  தமிழர் கட்சித் தலைவர் வழக்கறிஞர் புகழேந்தி , தமிழ் தேச கட்சித் தலைவர் தமிழ் நேயன், காந்தீய மக்கள் இயக்கத் தலைவர் சிவஞானசம்பந்தம், உலகத் தமிழின பேரியக்கத் தலைவர்  கரு.சந்திரசேகரன், தமிழாராட்சி கட்சித் தலைவர் வெ க சந்திரமோகன், தமிழக முற்போக்கு மக்கள் கட்சி செயலாளர் R.பிரபாகரன், மகளிரணித் தலைவர் காஞ்சனா  உள்ளிட்டவர்கள் கலந்துக் கொண்டனர். இக்கூட்டத்தில்  நிறைவேற்றப்பட்ட   தீர்மானங்கள் பின் வருமாறு.

 

1.காவிரி மேலாண்மை ஆணைய‌திற்கும் அதன் தலைவர் திரு. ஹல்தருக்கும் வன்மையான கண்டனங்கள்.

 

 

காவிரி நதி நீர் ஆணையத் தீர்ப்பு மற்றும் அது தொடர்பாக இறுதியாக உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் படி அமைக்கப்பெற்ற காவிரி மேலாண்மை ஆணையத்தின் பணி என்பது தீர்ப்பில் கூறப்பட்டுள்ளவாறு மாநிலங்களுக்கிடையே பகிர்ந்தளிக்கப்படுள்ள நீரை

-2-

நடைமுறைப்படுத்தும் போது பற்றாகுறை காலங்களில் ஏற்படும் சிக்கல்களை களைந்திடவே தவிர வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு எத்தகைய அதிகாரமும் இல்லை.  புதிதாக மேகதாது அணைக் கட்டுவதைப் பற்றி பேசியிருக்க கூடாது.  ஒரு பொருளாக மேகதாது வைக்கப்பட வேண்டுமென கர்நாடகம்  வற்புறுத்திய நிலையில் நிராகரிக்காமல் 28வது காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேகதாது அணைக் கட்டுவதை பொருளாக அதன் தலைவர் திரு. ஹல்தர் உள்நோக்கத்துடன் சேர்த்து மத்திய நீர்வள ஆணையத்திற்கு மேல் நடவடிக்கைகளுக்கு பரிந்துரைத்து தீர்மானம் நிறைவேற்றி உள்ளதை இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது. தமிழகத்தை வஞ்சிக்கும் நோக்கத்துடன் கொண்டுவரப்பட்ட இத் தீர்மானத்தை காவிரி மேலாண்மை ஆணையத்தில் கொண்டு வந்ததும் இல்லாமல் அதனை நியாயப்படுத்தி வரும் ஆணைத்  தலைவர் ஹல்தரின் செயல்பாடுகள் ச‌ந்தேகத்துடன் இருப்பதால் அவரையும் இக்கூட்டம்  வன்மையாக கண்டிக்கிறது.

 

  1. காவிரியில் மேகதாது அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக காங்கிரஸ் அரசை கண்டிக்கிறோம்.

 

 

காவிரி டெல்டா பகுதி முழுவதும் வறண்ட பாலைவனமாக மாற்றிவிடும் தன்மை கொண்ட காவிரி குறுக்கே மேகதாது அணைக் கட்டும் பணியில் கர்நாடக காங்கிரஸ் அரசு முனைப்பு காட்டி வருவது வேதனை அளிக்கிறது. காவிரியில் மேகதாது அணை கட்ட ஆய்வுப் பணிகள் முடிந்து நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள போவதாக குடியரசு தின விழாவில் கர்நாடக ஆளுனரை வைத்து காங்கிரஸ் அரசு சொல்லி இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. மேலும், கர்நாடக பட்ஜெட்டில் மூன்று குழுக்களை அமைத்தும் அதற்காக நிதி ஒதுக்கீடு செய்தும் மேகதாது அணை கட்டுவதை விரைவுப்படுத்தி வரும் கர்நாடக காங்கிரஸ் அரசை கண்டிக்கிறோம்.

 

 

-3-

  1. கர்நாடகத்திற்கு ஆதரவாக செயல்படும் காவிரி மேலாண்மை வாரியத் தலைவர் திரு. ஹல்தரை மத்திய அரசு பதவி நீக்கம் செய்ய வேண்டும்.

 

 

காவிரி மேலாண்மை ஆணையத்தில் எந்த ஒரு புதிய அணைக் கட்டுவது தொடர்பாக அணைக் கட்டுவதைப் பற்றி எத்தகைய அதிகாரமும் இல்லாத நிலையில், புதிதாக மேகதாது அணைக் கட்டுவதை  ஒரு பொருளாக மேகதாது வைக்கப்பட வேண்டுமென கர்நாடகத்தின் வற்புறுத்திய நிலையில் நிராகரிக்காமல் 28வது காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேகதாது அணைக் கட்டுவதை பொருளாக அதன் தலைவர் ஹல்தர் உள்நோக்கத்துடன் சேர்த்து தமிழகத்துக்கு துரோகம் இழைத்து உள்ளார்.நடுநிலையாக செயல்பட வேண்டிய பொறுப்பில் ஒரு தலைப்பட்சமாக செயல்பட்ட திரு. ஹல்தரை , காவிரி மேலாண்மை ஆணையத் தலைவர் பொறுப்பிலிருந்து நீக்க வேண்டுமென மத்திய அரசை இக்கூட்டம் வலிய்றுத்துகிறது.

 

  1. கர்நாடகத்திற்கு ஆதரவாக செயல்படும் மத்திய பாஜக அமைச்சர் திரு. கஜேந்திர சிங் செகாவத்தை கண்டிக்கிறோம்.

 

 

தமிழகத்தின் அனுமதி இன்றி காவிரியில்  எந்த ஒரு புதிய அணையும் கட்ட முடியாது என்பதை ஏற்றுக் கொண்ட மத்திய அமைச்சர் திரு. கஜேந்திர சிங் செகாவத் மேலும் கூறுகையில் காவிரியில் புதிய அணைக் கட்டுவதை தமிழகம் எதிர்க்கக் கூடாது என்றும்   28வது காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேகதாது அணைக் கட்டுவதை மத்திய நீர்வழி ஆணையத்திற்கு அனுப்பியதை  கூட்டத்தில் கலந்துக் கொண்ட அனைவரும் ஒருமனதாக ஏற்றுக் கொண்டனர் என்று கர்நாடகத்திற்கு வக்காலத்து வாங்குவது கர்நாடக பாஜக அரசியலுக்காக செயல்பட்டதாகத் தான் பார்க்கவேண்டியுள்ளது. நடுநிலையுடன் செயல்பட வேண்டிய மத்திய அமைச்சர் ஒரு மாநிலத்திற்கு அதுவும் தான்

 

-4-

 

சார்ந்த அரசியல் கட்சிக்காக செயல்பட்டுள்ளதை இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது.

 

  1. காவிரி மேலாண்மை ஆணையத்தில் திமுக அரசின் மெத்தன போக்கு தமிழகத்தை பாலைவனம் ஆக்கிவிடும்.

 

 

காவிரி மேலாண்மை ஆணையத்தில் மேகதாது குறித்த பொருள் வைக்கப்பட்ட நிலையில் அதனை எதிர்த்து உச்ச நீதி மன்றத்தை திமுக அரசு நாடியிருக்க வேண்டும். மேலும், அக்கூட்டத்தையும் தமிழ்நாடு அரசு புறக்கணித்திருக்க வேண்டும். காவிரி மேலாண்மை ஆணையத்தின் 28வது கூட்டத்தில் மேகதாது அணை கட்டுவதை  மத்திய நீர்வள ஆணையத்திற்கு மேல் நடவடிக்கைகளுக்கு பரிந்துரைத்து தீர்மானம் நிறைவேற்றியதை க‌லந்துக்கொண்ட தமிழக பிரதிநிதிகள் எதிர்த்தார்களென்று தமிழக நீர்வளத் துறை அமைச்சர் திரு.துரைமுருகன் கூறுகிறார். ஆனால், மத்திய நீர்வளத்துறை அமைச்சரோ இந்த தீர்மானம் ஒரு மனதாக நிரைவேற்றப்பட்டதாக கூறியுள்ளார். அதனை குறிப்பிட்டு மறுத்து திரு.துரைமுருகன் எதுவும் கூறவில்லை. மேலும், இதுக் கூறித்து எந்த நீதி மன்ற நடவடிக்கையோ அல்லது காவிரி மேலாண்மை வாரரியத்திற்கு மேகதாது அணை கட்டுவதை  மத்திய நீர்வள ஆணையத்திற்கு மேல் நடவடிக்கைகளுக்கு பரிந்துரைத்த தீர்மானத்தை ரத்து செய்யவோ கோரிக்கை வைக்காத நிலையில் திமுக அரசு மேகதாது அணை கட்டுவதை செயலற்று வேடிக்கைப் பார்ப்பதாக இக்கூட்டம் கருதுகிறது. இத்தகைய மெத்தன போக்கு தமிழகத்திற்கு பேராபத்தாக அமைந்துவிடுமென்பதால், காவிரி மேலாண்மை ஆணையத்தில் திமுக அரசின் மெத்தன போக்கை இகூட்டம் வன்மையாக கண்டிப்பதோடு, தமிழக அரசு தமிழக நீர்வழி உரிமைகளை பாதுகாக்க உடனடி நடவடிக்களை மேற்கொள்ள வேண்டுமென தமிழக அரசை இக்கூட்டம் வலியுறுத்துகிறது

 

 

 

-5-

  1. முல்லை பெரியாறு அணையில் புதிய அணை கட்டவேண்டுமென்ற கேரள அரசை கண்டிக்கிறோம்.

 

 

முல்லை பெரியாறு அணை பலவீனமாக இருக்கிறது என்றும் அதில் தேக்கி வைக்கும் நீரின் அளவை உயர்த்தக்கூடாது என்றும், முல்லை பெரியாற்றின் குறுக்கே புதிய அணையை கட்ட வேண்டும் என்றும் கேரளா தொடர்ந்து கூறி வருகிறது. இந்நிலையில், புதிய அணையின் வடிவமைப்பு மற்றும் சுற்றுசூழல் பாதிப்பு குறித்த ஆய்வு நிறைவடைந்து வருகிறது எனவே, புதிய அணை கட்ட வேண்டும் என்று சட்டசபையில் கேரள முதல்வர் கூறியுள்ளதை நினைவுப்படுத்தி  கேரள நீர்வளத்துறை அமைச்சர் ரோஷி கூறியுள்ள கருத்துக்களை வன்மையாக இக்கூட்டம் கண்டிக்கிறது. இத்தகைய பேச்சுக்களுக்கு முற்றுப்புள்ளி வைத்திட தமிழக அரசு உடனடியாக பெரியாறு அணையை முழுமையாக பலப்படுத்த வேண்டும்.

 

 

  1. காவிரியில் தண்ணீர் இல்லாததால் சம்பா சாகுபடி செய்ய முடியாத விவாசாயிகளுக்கும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும்.

காவிரியில் தண்ணீர் இல்லாததால் சம்பா சாகுபடி செய்ய முடியாத விவசாயிகளுக்கு தமிழக அரசு ரூபாய். 50,000 இழப்பீடும் காவிரி டெல்டா மாவட்டங்களில் ஜனவரி முதல் வாரத்தில் பெய்த பேய் மழையால்  பாதிக்கப்பட்ட  விவசாயிகளுக்கும் ஏக்கருக்கு ரூபாய் 50,000 இழப்பீடு வழங்க வேண்டுமென தமிழக அரசை இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

 

7          காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் பயிர்களும் மக்களும் பாதுகாக்கப்பட வேண்டும்.

 

 

 

 

-6-

காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல நோக்கங்கள் தீங்கு விளைவிக்கக்கூடிய தொழிற்சாலைகளையும் பசுமை மண்டலத்திற்கு எதிரான தொழில்களையும் முற்றாக தடை செய்வதென்றாலும்   இந்த வேளாண் மண்டலத்தில் உள்ள பயிர் தொழிலைப் பாதுகாப்பதும் மக்களின் வாழ்வாதாரங்களை உறுதிப்படுத்துவதும் முழுமையான நோக்கங்களாக இருக்க வேண்டுமென இக்கூட்டம் வலியுறுத்துகிறது. அதற்காக கீழ்க் கண்டவற்றை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டுமென இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

  • காவிரி டெல்டா பாதுகாப்பு மண்டலத்தில் உள்ளவர்களுக்கே நிலவுரிமை. அறிவிக்கப்பட்டுள்ள காவிரி டெல்டா பாதுகாப்பு மண்டலத்தில் உள்ளவர்கள் மட்டுமே பதுகாப்பு மண்டலத்திற்கு உட்பட்ட நிலங்களை உரிமைக் கொண்டாட முடியும் பிற பகுதியினருக்கு விற்பனை செய்திட இயலாத வகையில் சட்டம் இயற்றப்பட வேண்டுமென தமிழக அரசை இக்கூட்டம் வலியுறுத்துகிறது.காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக பாதுகாக்க மணல் குவாரிகளுக்கு முற்றிலுமாக தடை விதிக்க வேண்டும்.
  • காவேரி டெல்டா மண்டல மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, அரியலூர், கடலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் நெல், நெல்லிற்கு அடுத்தபடியாக உளுந்து மற்றும் பச்சைப்பயிறு சாகுபடி செய்யப்படுகிறதுவளமான மண், மற்றும் நிலத்தடி நீர் ஆதாரத்தினைக் கணக்கில் கொண்டு நிலக்கடலை, மக்காச்சோளம், எள், ஆகியவை பயிரிடப்படுகின்றது. எனவே, நீர் ஆதாரமே காவிரி டெல்டாவின் முதன்மையான தேவை என்பதால் காவிரி நதி நீர்ப் பங்கீட்டு உச்ச நீதி மன்ற ஆணையின் படியான காவிரி நீரைப் பெற தமிழக அரசு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மத்திய அரசும் வடிகால் மாநிலத்தின் நீர் உரிமைகளை காத்திட முன்வரவேண்டும், மேலும், பொதுவாக நீர் தேக்க முறைகளை தேவையான தடுப்பணைகள் மூலமும் நீர்த் தேக்க வழிமுறைகளையும் கையாள தமிழக அரசை இக்கூட்டம் வலியுறுத்துகிறது.
  • காவேரி டெல்டா மண்டல மாவட்டங்களில் வேறுத் தொழில்களுக்கு வாய்ப்பில்லாததால் மாவட்டத்திற்கு ஒரு வேளாண் கல்லூரிகளை அரசே

-7-

 

திறக்க வேண்டும். ஒவ்வொரு வட்டத்திலும் வேளாண் ஆராய்ச்சிக் கூடங்களை தமிழக அரசு ஏற்படுத்த வேண்டுமென தமிழக அரசை இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

  • காவேரி டெல்டா மண்டல மாவட்டங்களில் வேலையற்ற இளைஞர்களுக்கு மாதம் தோறும் ரூபாய் 3,000 வழங்க வேண்டுமென தமிழக அரசை இக்கூட்டம் வலியுறுத்துகிறது.
  • காவேரி டெல்டா மண்டல மாவட்டங்களில் இடுபொருட்களையும் நவீன வேளாண் தொழிற்கருவிகளையும் இலவசமாக வழங்க  வேண்டுமென தமிழக அரசை இக்கூட்டம் வலியுறுத்துகிறது.
  • காவேரி டெல்டா மண்டல மாவட்டங்களில் அறுவடை செய்யப்படும் நெல் அத்துணையும் எந்த கட்டுப்பாடும் இல்லாமல் தமிழக அரசு கொள்முதல் செய்யப்பட வேண்டுமென தமிழக அரசை இக்கூட்டம் வலியுறுத்துகிறது.
  • காவேரி டெல்டா மண்டல பகுதியின் வளர்ச்சிக்கு வேளாண் விளை பொருள்களை மதிப்புக்கூட்டி பதப்படுத்தும் தொழிற்சாலைகளையும் வேளாண்மைக்கான இயந்திரங்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளையும் , அது தொடர்பான ஆராய்ச்சி செய்து, புத்தாக்கம் செய்வதற்கான தொழிற்சாலைகளையும் கொண்டு வர வேண்டுமென தமிழக அரசை இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

 

  1. தென்னை விவசாயிகளை பாதுகாக்க தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

 

 

பேராவூரணி, பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு ஆகிய பகுதிகளில் சுமார் 1.20 இலட்சம் ஏக்கரில் தென்னை விவசாயம் செய்யப்படுகிறது. ஆனால், தென்னை சார்ந்த தொழில் வளர்ச்சி இப்பகுதியில் முற்றிலுமாக இல்லை அது மட்டுமின்றி, தேங்காய், கொப்பரை இரண்டும்  குறைந்த விலைக்கே கொள்முதல் செய்யப்படுகின்றன. ரூபாய் 25க்கு விற்பனை செய்யப்பட்ட தேங்காய் இன்று ரூபாய் 10க்கே விற்கப்படுவது தென்னை விவசாயிகளுக்கு பெருத்த இழப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரள அரசு

 

 

-8-

கொள்முதல் செய்வது போன்று, தமிழக அரசே தேங்காயை ரூபாய் 40 க்கு கொள்முதல் செய்ய வேண்டும்.கொப்பரை கொள்முதல் விலையை ரூபாய் 140 ஆக உயர்த்தி வழங்க தமிழக அரசு முன்வரவேண்டும்.தென்னை தொடர்பான தென்னை சார்ந்த மதிப்பு கூட்டப்பட்ட பொருள்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளை தமிழக, மத்திய அரசுக‌ள் உருவாக்க வேண்டும்.

 

 

  1. காவிரி டெல்டா பாராளுமன்ற தொகுதிகளில் பொதுவான வேட்பாளர்கள் நிறுத்த அனைத்து கட்சிகளும் முன் வர வேண்டும்.

 

 

நீரினின்றி அமையாது உலகு என்று வள்ளுவர் கூறியது யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ உறுதியாக காவிரி டெல்டா பகுதிகளுக்கு பொருந்தும். இந்த டெல்டா பகுதியில் பெருமளவில் பயிர் செய்யப்படுகிற நெற்பயிருக்கும் நீர் என்பது ஆதார சுருதியாக இருந்தாலும் குறுவை, சம்பா பயிர்களுக்கு  தேவையான நீர் என்பது தொடர்ந்து மறுக்கப் பட்டு வருகிறது. இதன் காரணமாக விவசாயம் ஒரு புறம் பாதிக்கப்படுவதோடு விவசாயிகள் எந்த வருமானமும் இல்லாமல் துன்பப்படும் நிலைக்கு தள்ளப்பட்டாலும் காவிரியில் நீர் திறந்து விட கர்நாடகத்தில் இருக்கும் எந்த அரசும் முன் வருவதில்லை. கர்நாடாகாவில் பாஜக ஆட்சியில் இருந்தாலும் காங்கிரஸ் ஆட்சியிலிருந்தாலும் தமிழகத்திற்கு காவிரி நீரைத் திறக்கக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளனர். கடந்த 2023   ஆண்டு, ஆட்சி மாறினாலும் தமிழகத்தை வஞ்சிப்பதில் அங்கே உள்ள கட்சிகள் போட்டி போட்டுக் கொண்டன. அங்கே உள்ள கன்னட இன அமைப்புகளும் தமிழகத்தை வஞ்சிப்பதில் உறுதியாக இருந்து கட்சிகள் வேறு நிலையை எடுப்பதை தடுக்கின்றன. ஆனால், தமிழகத்தில் சாதிய,மத  உணர்வு ரீதியாக கட்சிகள் இருப்பதும் இத்தகைய கட்சிகள் காவிரி டெல்டா பகுதிகளில் இல்லாததும் தமிழகத்தை வஞ்சிக்கும் கர்நாடகத்தின் நிலைப்பாட்டை பெரும்பாலான சாதிய, மதவாத கட்சிகள்

-9-

 

எடுப்பதில்லை. மறுபுறம், தமிழகத்திலூள்ள கட்சிகளின் கூட்டணி நிலைப்பாடும் கர்நாடகத்திலுள்ள‌ தேசிய கட்சிகளின் தோழமையாக இருப்பதால் காவிரி டெல்டா உரிமையை காத்திட குரல் எழுப்பக் கூட  தயங்கிய நிலையை கடந்த ஆண்டு தமிழகம் காண நேர்ந்தது. இதன் காரணமாக மத்திய அரசுக்கு எதிரான வலுவான போக்கினை வெளிப்படுத்த தமிழகம் தவ‌றிவிட்டது. இன்னிலை தொடரக் கூடாதென்றால்,  காவிரி நீர்ப் பிரச்சனையில் தமிழகமே ஒன்றிணைந்து உள்ளது என்பதை வெளிக்காட்ட, காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள பாராளுமன்ற தொகுதிகளில் பொதுவான வேட்பாளர்களை நிறுத்தப்பட வேண்டுமனவும் அத்தகைய பொதுவான வேட்பாளர்களை அனைத்து கட்சிகளும்  ஆதரிக்க  வேண்டுமெனவும்  இக்கூட்டம்  தீர்மனிக்கிறது.

 

  1. தமிழ்நாட்டு உரிமைகளுக்கு எதிரான கட்சிகள் தோற்கடிக்க‌ப்பட வேண்டும்.

 

காவிரி, முல்லைப் பெரியாறு, தென்பெண்ணை உள்ளிட்ட தமிழக ஆறுகளின் உரிமைகளை தொடர்ந்து அண்டை மாநிலங்கள் மறுத்து வருகின்றன. மேலும், இந்தி மொழியை திணிக்க பல்வேறு வகைகளில் தொடர்ந்து பல மத்திய அரசுகள் செயல்பட்டு வருகின்றன. வேலை வாய்ப்புகளிலும் பொருளாதார முதலீடுகளிலும் தமிழ்நாடு புறக்கணிக்க‌ப்படுகிறது. இத்தகைய நிலைப்பாட்டிற்கு அரசியல் கட்சிகளின் அடிப்படை கோட்பாடுகளும் அரசியல் லாபங்களும் காரணமாக அமைந்துள்ளன. எனவே, தமிழ்நாட்டு உரிமைகளுக்கு எதிரான நிலைப்பாடு எடுக்கும் கட்சிகளையும் அவற்றிற்கு ஆதரவான நிலைப்பாடு எடுக்கும் தமிழக கட்சிகளையும் இந்த பாராளுமன்றத் தேர்தலில்  தோற்கடிக்கப்பட வேண்டுமென இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

 

www.tmmkatchi.com

[email protected]

Author: Secretary, TMMK

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *