தமிழக முற்போக்கு மக்கள் கட்சி – 2024 நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை

தமிழக முற்போக்கு மக்கள் கட்சி

2024 நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை

  • அனைவருக்கும் கல்வி, மின்சாரம், அரிசி, கேஸ் சிலிண்டர், மருத்துவம் விலையில்லாமல் வழங்குதல்.
  • ஊழல்வாதிகளுக்கு உடனடி சிறை,ஊழல் சொத்துக்கள் பறிமுதல் என ஊழலை வேரோடு ஒழித்தல்.
  • வேலை வாய்ப்பைப் பெருக்கி வறுமையை ஒழித்தல்.
  • மாநில மக்களுக்கே வேலை.
  • தேசிய இனங்களின் கூட்டாச்சி.
  • தமிழ்நாட்டு உரிமைகளை மீட்டெடுத்தல்
  • விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்காத வளர்ச்சி
  • புதிய அரசியல் சாசனத்தை இயற்றுதல்.

 

2024 -நாடாளுமன்றத் தேர்தல்- அணுகு முறை

மத்திய அரசில் காங்கிரஸ் மற்றும் பாஜக ஆட்சிகளும் கடந்த 56 ஆண்டுகளாக தமிழகத்தை மாறி,மாறி திமுகவும்,அதிமுகவும் ஆட்சி செய்தாலும் ஏறக்குறைய 8  கோடி பேர் உள்ள தமிழக மக்கள் தொகையில், வறுமைக் கோட்டிற்குக் கீழே ஏறக்குறைய  நான்கு கோடி பேர் வாடி, வதங்கிக் கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தில் 70 சதவிகித மக்கள் நம்பி இருக்கக்கூடிய வேளாண் தொழிலானது மிகப்பெரிய சரிவை சந்தித்துக் கொண்டிருக்கிறது. காவிரி,முல்லை பெரியாறு,தென்பெண்ணை,பாலாறு இப்படி தமிழகத்தின் நதிகள் அனைத்தும் அண்டை மாநிலங்களின் முறையற்றப் போக்கினால், சட்டப்படியும் நியாயப்படியும் வர வேண்டிய நதி நீர் தமிழகத்திற்கு கிடைக்காமல், வேளாண்மை பாதிக்கப்பட்டு விவசாயமும் விவசாயிகளும் துயருக்கு ஆட்ப‌டுத்தப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. மறுபுறம், எட்டு வழிச் சாலை, பரந்தூர் விமான நிலையம் என்ற பெயரில் பொன் விளையும் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு விவசாயம் பொய்த்துப் போக வளர்ச்சி என்ற பெயரில் வேளாண்மை துன்பப்படுகிறது. தமிழ் நாட்டில் மிகப் பெரிய அளவில் சிறு,குறு,குடிசைத்  தொழில்கள் வேளாண் சார்ந்த தொழில்கள் தமிழர்களுக்கு வாழ்வாதாரமாக இருந்த இவைகள் முற்றிலும் செயல் இழந்துள்ளது.

ஆனால் அதே நேரத்தில் தமிழர்கள் இல்லாத தொழில்துறை, சேவைத்துறை ஆகியவை மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளது. எனவே, திமுக,அதிமுக ஆட்சிகளில் தமிழர்களின் எந்த முன்னேற்றத்திற்கும், எந்த வழிவகையும் செய்யப்படவில்லை. தமிழ்நாட்டில் உள்ள தொழில் வளர்ச்சி என்பது பன்னாட்டு தொழில் நிறுவனங்களினாலும், இந்திய பெருமுதலாளிகளின் தொழில் நிறுவனங்களாலும் ஏற்பட்டதே ஆகும். இதனால் அடித்தட்டு மக்களுடைய பொருளாதார வளர்ச்சி முற்றிலும் இல்லை. திமுக,அதிமுகவினுடைய ஆட்சி காலங்களில் சாதாரண மக்களுக்குக் கிடைக்க வேண்டிய கல்வி எட்டாக்கனியாகியுள்ளது. அது மட்டுமின்றி இரு மொழி கொள்கை கொண்ட திமுக,அதிமுக கட்சிகள் தமிழ் வழிக் கல்வியைப் புறக்கணித்து ஆங்கில வழிக் கல்வியைத் திணிப்பதற்கான எல்லா நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.

எனவே, காங்கிரஸ் , பாஜக , திமுக,அதிமுக கட்சிகள் தமிழர்களுக்கு வேண்டிய அடிப்படை மாற்றங்களுக்காக எந்த முயற்சியும் மேற்கொள்ள வில்லை என தமிழக முற்போக்கு மக்கள் கட்சி கருதுகிறது.

இந்திய நாட்டில் உள்ள தமிழ்த் தேசிய இனம் உட்பட அனைத்து தேசிய இனங்களின் மொழி வளம், கலாச்சாராம், பண்பாடு ஆகியவற்றை மேம்படுத்தவும், பாதுகாக்கவும் தற்போதைய  அரசியல் அமைப்பு பயன் தராது என தமிழக முற்போக்கு மக்கள் கட்சி கருதுகிறது.மேலும் தமிழ் தேசிய இனம் உட்பட அனைத்து தேசிய இனங்களின் பொருளாதார ஆளுமை, அரசியல் அதிகாரம், கல்வி வளர்ச்சி மற்றும் வளமான மனித இன வாழ்கைக்கு இன்றைய அரசியல் அமைப்பு முறை பயன் தரவில்லை. இக்குறைபாடுகள் களையப் பெற்றால் ஒழிய, வலிமையான இந்திய அரசு அமைவது கடினம்.

இந்திய நாட்டில் உள்ள அனைத்து தேசிய இனங்களின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பிற்கு வழிவகை செய்திடும் வகையில், மொழி வழி மாநிலங்களுக்கு தன்னாட்சி அதிகாரம் பெற்று செயல்பட வேண்டிய விதத்தில் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் திருத்தப்பட வேண்டும். அரசியல் அதிகாரம் அந்தந்த   மாநிலத்தின் தேசிய இனத்திடம் இருக்க வேண்டும் என தமிழக முற்போக்கு மக்கள் கட்சி கருதுகிறது.

மாநில தன்னாட்சி ஏற்பட ஒவ்வொரு மாநிலத்திலும் தனி அரசியல் அமைப்புச் சட்டம் இயற்றப்பட வேண்டும்.இத்தகைய தேசிய இனப் பார்வைகளை வருகின்ற 2024 நாடாளுமன்றத் தேர்தல் பார்வையாக தமிழக முற்போக்கு மக்கள் கட்சிதமிழக மக்கள் முன்வைக்கிறது. இத்தகைய கொள்கைகளைத் திட்டங்களைத் தரவல்ல, செயல்படுத்தக்கூடிய ஒரே இயக்கமாக மக்கள் மத்தியில், தமிழக முற்போக்கு மக்கள் கட்சிமட்டுமே இருக்கும் என உறுதியாகக் கருதுகிறோம்.

இத்தகைய கொள்கைகளைக் கொண்ட தமிழக முற்போக்கு மக்கள் கட்சி தமிழ்த் தேசிய அடையாளத்தை மீட்டெடுக்க, தமிழர்களின் பொருளாதார இறையாண்மையை மீட்டெடுக்கவும்,தமிழர்களினுடைய பண்பாடு காக்கப்படவும் அது தவிர, இந்தியாவில் ஒரு புதிய பொருளாதார கொள்கை அமையக் கூடிய வகையில்,    தமிழ்த் தேசியத்தை முன்னிலைப்படுத்தியும், திராவிட தேசிய கட்சிகளுக்கு மாற்றாகவும், புதிய மாற்று பொருளாதாரக் கொள்கைகளை முன்வைத்தும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அணுகுமுறை மேற்கொள்வதென தீர்மானிக்கிறோம்.

2024 – பாராளுமன்றத் தேர்தல் –ஊழல் அரசியல் கட்சிகளைப் புறக்கணித்து நேர்மையான அரசியல் பாதையை  மக்கள்  தேர்ந்தெடுக்கவேண்டும்

எதுவும் நடக்க வேண்டுமென்றால் கையூட்டை அளித்தே தீர வேண்டுமென்ற மனநிலைக்கு இந்தியர்கள் தள்ளப்பட்டு உள்ளார்கள். உலக நாடுகளின் ஊழல் பட்டியலில் இந்தியாவிற்கு 93 ஆம் இடத்தை அளித்துள்ளது.இன்றைக்கு ந‌டைப்பெறுகின்ற ஊழல்கள் ஒரு சில கோடிகளில் இல்லாமல்,லட்சக்கணக்கான கோடிகளில் இருப்பது தான் இந்தியாவின் வளர்ச்சிக்கு ஏற்ப வறுமையும்,வேலையில்லாத் திண்டாட்டமும் குறையாமல் இருப்பதற்கு காரணமாகும். எனவே, ஊழல் அரசியல் கட்சிகளைப் புறக்கணித்து நேர்மையான அரசியல் பாதையை மக்கள் தேர்ந்தெடுக்கவேண்டும்.

ஊழலின் ஊற்றுக் கண்ணாக இருந்திடும் அரசியலை சீர்ப்படுத்திடும் எண்ணத்தை முதலில் மக்கள் பெறவேண்டும்.அதன் வழியாக,ஊழல் கட்சிகளையும் அரசியல்வாதிகளையும் மக்கள் புறக்கணித்தால் மட்டுமே நேர்மையான ஆட்சி அதிகாரத்திற்கு வழிவகுப்பதோடு,இந்தியாவின் வளர்ச்சிக்கு ஏற்ப வறுமையும், வேலையில்லாத் திண்டாட்டமும் குறைந்து எல்லா மக்களுக்குமான வளர்ச்சியாக அமைந்திடுமென்பதை தமிழக முற்போக்கு மக்கள் கட்சி எடுத்துரைக்கிறது.

இச்சூழ்நிலையில் இந்திய நாடும் நாட்டின் தேசிய இனங்களில் ஒன்றான தமிழினமும் சந்தித்து வரும் பல்வேறு பிரச்சனைக்களுக்கு தீர்வாக தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின் 2024 நாடாளுமன்றத்  தேர்தல் அறிக்கையை அளிக்கிறோம்.

  1. வேளாண்விளைப் பொருட்களுக்கு அடிப்படை விலை நிர்ணயத்தில் மாற்றம் செய்யப்படும்.

வேளாண்விளைப் பொருட்களுக்கு அடிப்படை விலை நிர்ணயத்தில் தேசிய வேளாண்மை ஆணையம் அறிவித்த முறையை மத்திய, மாநிலஅரசுகள் செய்யத் தவறி வருகின்றன.தேசிய வேளாண்மை ஆணையம் அறிவிப்பின் படி,சாகுபடி செலவோடு குறைந்தது 50% தொகை சேர்த்துஅனைத்து வேளாண்விளைப் பொருட்களுக்கு அடிப்படை விலை நிர்ணயம் செய்ய வேண்டும்.ஆனால்,இத்தகைய நடைமுறை நெல்,கரும்புக்குக் கூடசெய்யப்படுவதில்லை.அது மட்டுமின்றி,வேளாண்விளைப் பொருட்களுக்கும் அடிப்படை விலையோடு சேர்த்து மதிப்புக் கூட்டு விலையும் கணக்கில்கொண்டு விலை நிர்ணயம் செய்யப் பட வேண்டும். அப்போது தான் விவசாயிகளுக்கு நன்மை ஏற்படும். இதற்காக, வேளாண்விளைப் பொருட்களுக்குஅடிப்படை விலை நிர்ணயத்தில் மாற்றம் செய்ய மக்கள் மாநாடு கட்சி பாடுபடும்.

  1. அனைவருக்கும் கல்வி, மின்சாரம், அரிசி, கேஸ் சிலிண்டர், மருத்துவம் விலையில்லாமல் வழங்குதல்.

இன்றியமையாத தேவைகளை மக்களுக்கு அளிப்பதன் வழியாக சாதாரண ஆசைகளிலிருந்து மக்கள் விடுப்பட்டு தங்களை அறிவியல் பூர்வமான சிந்தனைக்கும் மேம்பாட்டுக்கும் ஆட்படுத்திக்கொள்வதால், அவர்கள் வளர்வதோடு தங்களை சுற்றி உள்ள சமுதாய‌த்தையும் வளர்த்து நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்ற வாய்ப்புக்கள் இருப்பதால், மக்களின் இன்றியமையாத தேவைகளான கல்வி, மின்சாரம், அரிசி, கேஸ் சிலிண்டர், மருத்துவம் ஆகியவை அனைத்து மக்களுக்கும் விலையின்றி நாடு முழுவதும் கிடைத்திட வழிவகை காணப்படும்.

 

  1. ஊழல்வாதிகளுக்கு உடனடி சிறை,ஊழல் சொத்துக்கள் பறிமுதல் என ஊழலை வேரோடு ஒழித்தல்.

மத்திய அரசு நிறைவேற்றியுள்ள ஜன் லோக்பால் சட்டம், .மேலும், பணமதிப்பிழப்பு நடவடிக்கை, அமுலாக்கத்துறையின் பல்வேறு நடவடிக்கைகள்.இருப்பினும் ஊழல் குறையவும் இல்லை ஊழல்வாதிகள் தண்டிக்கப்படாமல் வழக்குகளோடு நின்றுவிடுகிறது. இவை மாற்றப்பட்டு,  ஊழல்வாதிகளுக்கு உடனடி சிறை, ஊழல் சொத்துக்கள் உடனடியாக பறிமுதல் செய்திடும் வகையில் சட்டமும் செயல்பாடுகளும் அமைந்திடுமென தமிழக முற்போக்கு மக்கள் கட்சி உறுதி அளிக்கிறது.

  1. கச்சத் தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்தல்

கச்சத்தீவு தமிழர்களுக்கு சொந்தமானப் பகுதியாகும். கச்சத்தீவு ராமநாதபுரம் சேதுபதி மன்னருக்குச் சொந்தமானது. கச்சத் தீவை  தமிழகத்தில் இருந்தஇரு தமிழர்களுக்கு ராமநாதபுரம் மன்னர் சேதுபதி, குத்தகைக்கு கொடுத்துள்ளார் என்கின்ற ஆதார ஆவணம் ராமநாதபுரம் நில நிர்வாகப் பதிவேட்டில்ஆதாரப்பூர்வமாக உள்ளது. கச்சத் தீவு பற்றி இப்படி பல ஆதாரங்கள் தமிழகத்தில் உள்ளது. கச்சத்தீவில்  நடைபெறும்  புனித அந்தோணியார் கோயில்திருவிழாக்களில் தமிழக மீனவர்கள் ஆண்டு தோறும் தொடர்ந்து பங்கேற்று பல ஆண்டுகாலம் கொண்டாடி வந்து கொண்டிருக்கிறார்கள்.  அது மட்டுமல்ல, தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லும் பொழுதெல்லாம் கச்சத்தீவில் தங்கி ஒய்வெடுத்தும், மீன்பிடி வலைகளை உலர்த்தியும் கச்சத்தீவைநீண்டகாலமாகத் தமிழக மீனவர்கள் பயன் படுத்திவந்திருக்கின்றனர். அந்த வகையில் இந்திய நாட்டோடு இணைந்தப் பகுதியாகும்.இந்தியாவின் எந்த ஒருப் பகுதியையும் வேறு நாட்டிற்கு அளித்திடக் கூடிய உரிமை இந்திய அரசியல் சட்டப்படி இந்தியாவின் மத்திய அரசிற்கு இல்லை.எனவே, கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்தல் மட்டுமின்றி,கச்சத்தீவை தமிழகத்தோடு இணைந்தப் பகுதியாக அறிவிக்கப்படும்.

  1. தமிழக,புதுவை மீனவர்களை  மத்திய அரசு காத்திடும்.

தமிழக,புதுவை மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதும் கைதுச் செய்யப்படுவதும்  தொடர்கதையாகி வருகிறது. இதுவரை தினந்தோறும்  தமிழக, புதுவை ஆயிரக்கணக்கான‌ மீனவர்கள் கைதுச் செய்யப்படுவதும் வாடிக்கையாக இன்றளவும் தொடர்கிறது. இந்தக் கொடுமை இனி தொடரக்கூடாது. இந்திய கடற்படை தமிழக,புதுவைமீனவர்களுக்கு முழுப் பாதுகாப்பு அளித்து  தமிழக,புதுவை மீனவர்களைக் காத்திட தமிழக முற்போக்கு மக்கள் கட்சி பாடுபடும்.

  1. புதியஇந்திய அரசமைப்பு சட்டத்தை உருவாக்கப்படும்.

விடுதலைக்கு பின்னர் 1950ல் ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்திய அரசமைப்புச்  சட்டம் 98 முறை திருத்தப்பட்டு உள்ளது. உலகின் எந்த சனநாயகநாட்டிலும் ஒருஅரசமைப்புச்  சட்டம் இத்துணை முறை திருத்தப்பட்டதில்லை.மேலும்,தேசிய இனங்களின் சம உரிமையை பாதுக்காக்கிறமுறையிலான வகையில் தற்போதைய இந்திய அரசமைப்புச்  சட்டம் யற்றப்படவில்லை. எனவே, நம் நாட்டு மக்கள், தேசிய இனங்களின் சஉரிமைகளுக்கேற்ப  இந்திய அரசமைப்பு சட்டமானது புதிய வடிவில் உருவாக்கப்படும்.

  1. தமிழகத்தின்  நீர் பாசன திட்டங்கள் மத்திய அரசு உதவியுடன் உடனடியாக நிறைவேற்றப்படும்.

தமிழகத்தின் மேற்கு மண்டல நீர்  பாசன திட்டங்களையும் பிற நீர்ப் பாசனத்திட்டங்களையும்  மத்திய அரசு உதவியுடன் உடனடியாக நிறைவேற்றப்படும். முல்லை பெரியாறு நீர்த்தேக்கத்தில் அணையின் மொத்தஅளவான 152அடி நீரைத்தேக்கலாம் என்பது உறுதிச் செய்யப்படும்.அணையின் பாதுகாப்பு தமிழக அரசிடமே இருந்திடும் வகையில்ஆணை பிறப்பிக்கப்படும்.அதைப் போலவே, பாலாற்றில் தடுப்பு அணைக் கட்டி,பாலாற்று நீரை முற்றிலுமாக தடுக்கப் பார்த்திடும்ஆந்திர அரசின் செயல் தடைச் செய்யப்படுமென தமிழக முற்போக்கு மக்கள் கட்சி உறுதி அளிக்கிறது.

  1. காவிரியில் மேகதாது அணைக்கு மத்திய அரசு தடை விதிக்கும்.

காவிரியில் மேகதாது அணை கட்ட ஆய்வுப் பணிகள் முடிந்து நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள போவதாக குடியரசு தின விழாவில் கர்நாடக ஆளுனரை வைத்து காங்கிரஸ் அரசு சொல்லி இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. மேகதாது அணை கட்டாத நிலையிலேயே தமிழகத்திற்கு தண்ணீர் தர இயலவில்லை எனக் கூறும் கர்நாடகம் , மேகதாது அணைக்கட்டி விட்டால் ஒரு சொட்டு காவிரி நீரையும் தாராது. காவிரி டெல்டா பகுதி முழுவதும் வறண்ட பாலைவனமாக மாறிவிடும். இருப்பினும் , திமுக அரசு மெத்தனமாக இருந்து  உடனடியாக உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை. கர்நாடக காங்கிரஸ் அரசிற்கு துணை போகாமல் மத்திய அரசு மேகதாது அணைக் கட்டப் பணிகளுக்கு தடை விதிக்கும்.

  1. முல்லை பெரியாறு அணையில் புதிய அணை கட்டவேண்டுமென்ற பேச்சுக்கு முற்றுப் புள்ளி வைக்கப்படும்.

முல்லை பெரியாறு அணை பலவீனமாக இருக்கிறது என்றும் அதில் தேக்கி வைக்கும் நீரின் அளவை உயர்த்தக்கூடாது என்றும், முல்லை பெரியாற்றின் குறுக்கே புதிய அணையை கட்ட வேண்டும் என்றும் கேரளா தொடர்ந்து கூறி வருகிறது. இந்நிலையில், புதிய அணையின் வடிவமைப்பு மற்றும் சுற்றுசூழல் பாதிப்பு குறித்த ஆய்வு நிறைவடைந்து வருகிறது எனவே, புதிய அணை கட்ட வேண்டும் என்று சட்டசபையில் கேரள முதல்வர் கூறியுள்ளதை நினைவுப்படுத்தி  கேரள நீர்வளத்துறை அமைச்சர் ரோஷி கூறியுள்ள கருத்துக்களுக்கு முற்றுப்புள்ளி வைத்திடும் வகையில் மத்திய அரசின் செயல்பாடு அமைந்திடும். இத்தகைய பேச்சுக்களுக்கு முற்றுப்புள்ளி வைத்திட  உடனடியாக பெரியாறு அணையை முழுமையாக பலப்படுத்தப்படும்.

  1. மொழிவாரி அடிப்படையில் இட ஒதுக்கீடு.

இந்திய பாராளுமன்றம், சட்ட மன்றங்கள் இந்திய உயர் நீதித் துறை, இந்திய உயர் அதிகார துறைகளாக உள்ள இந்திய ஆட்சிப்பணி, இந்திய காவல் பணி, இந்திய வனப் பணி போன்ற பதவிகளில் எல்லா தேசிய இனங்களும் குறிப்பாக தமிழர்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லாமல் இருக்கிறது. எனவே, மொழி வாரி அடிப்படையில் இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டால் மட்டுமே எல்லா தேசிய இனங்களும் சரியான முறையில் இந்திய நாட்டின் இறையாண்மையைக் காப்பதிலும் இந்திய நாட்டின் வளர்ச்சியிலும் பங்கேற்பதாக அமையும். அந்த வகையில் மொழி வாரி அடிப்படையில் பாராளுமன்றம், சட்டமன்றங்கள் இந்திய உயர் நீதித்துறை, இந்திய உயர் அதிகாரத் துறைகளாக உள்ள இந்திய ஆட்சிப்பணி, இந்திய காவல் பணி, இந்திய வனப்பணி போன்ற பதவிகளில் எல்லா தேசிய இனங்களும் அவரவர்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப இட ஒதுக்கீடு செய்திட மக்கள் மாநாடு கட்சி முயற்சிகளை மேற்கொள்ளும்.

  1. சிறுதொழில்களுக்குப் பாதுகாப்பு

கோடிக்கணக்கான பேருக்கு வேலைவாய்ப்பைத் தரச்கூடியதும் உள்ளூர் ஆதாரங்களை பெருமளவில் பயடபடுத்தக்கூடியதுமான சிறுதொழில்கள் நசிந்து போக உலகமயமாக்கல் கொள்கைகளும் மத்திய அரசு அளித்தப் பாதுகாப்பை முற்றிலுமாக விலக்கிக்கொண்டதும் காரணமாகும். இதனைக் களைந்திட சிறு தொழில்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும். உள்ளூர் ஆதாரங்களைபயன்படுத்தும் எல்லா தொழில்களும் சிறு தொழில் பட்டியலில் கொண்டு வரப்பட்டு பாதுகாக்கப்பட்ட தொழிலாகஅறிவிக்கப்படும்.

  1. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்காத வளர்ச்சி

இந்தியாவின் இறையாண்மைக்கு எதிராக ஏழை, எளிய விவசாயிகளைப் பாதிக்கக்கூடிய வகையிலும் அமைந்துள்ள பல தொழிற்சாலைகள் பொருளாதார வளர்ச்சி என்ற பெயரில் ஊக்குவிக்கப்படுகின்றன. சிறப்புப்பொருளாதார மண்டலங்கள், விரைவுச் சாலைகள், புதிய விமான நிலையங்கள் என்றப் பெயரில் லட்சக்கணக்கான விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு, வேளாண்மை பாதிக்கப்படுவதோடு, விவசாயிகள் நிலமற்ற‌வர்களாகப்பட்டு, வேலை வாய்ப்பின்றி, வறுமைக்கோட்டுக்கு கீழே தள்ளப்படும் அவலமானது வளர்ச்சி என்றப் பெயரில் நடைபெற்று வருகிறது. வளர்ச்சிக்கான கட்டமைப்புக்கள் ஏற்படுத்தப்ப்ட வேண்டுமெனினும் தேவையற்ற வளர்ச்சிக்கான திட்டங்கள் பெருமைக்காக ஆட்சியாளர்களால் செய்யப்படும் போது மக்கள் பெரிய அளவிலான துன்பத்திற்கு தள்ளப்படுகிறார்கள். சென்னை‍ சேலம் எட்டு வழிச் சாலை, பரந்தூர் புதிய விமான நிலைய திட்டங்கள் என்பவை மக்களின் குறிப்பாக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை சிதைத்து மக்கள் மீது திணிக்கப்படுகிற திட்டங்களாக தமிழக முற்போக்கு மக்கள் கட்சிப் பார்க்கிறது. எனவே, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்காத வளர்ச்சி என்ற பார்வையில் சென்னை‍ சேலம் எட்டு வழிச் சாலை, பரந்தூர் புதிய விமான நிலைய திட்டங்கள் நிரந்தரமாக கைவிடப்படும்.

 

 

  1. வெளிநாட்டுக் கொள்கை

எல்லா நாடுகளுடன் நட்புறவு கொள்ளும் அதே வேளையில் இந்தியாவிற்கு எதிரான, மனித உரிமைகளை மறுக்கிற, தேசியஇனங்களுக்கு சம உரிமை மறுக்கிற நாடுகளுடன் இந்தியா எத்தகைய உறவையும் வைத்துக் கொள்ளாது.

  1. ஈழத்தைத் தனிநாடாக ஏற்றுக் கொள்ளுதல்- தமிழீழத்துக்கான பொதுவாக்கெடுப்பு

ஈழம் என்ற நாட்டை பிற நாடுகள் ஏற்றுக்கொள்ளக் கூடிய தன்மை அங்கே நிலவுகிறதா என்று பார்த்திடும் போது, பிரிந்துப் போகக் கூடிய உரிமைஒரு இனத்திற்கு உண்டா, இல்லையா என்பதை சோவியத் ரசியாவின் தலைவராக விளங்கிய சடாலின் மூன்று அடிப்படைகளை கூறுகிறார்.முதலில்அந்த நாட்டிலுள்ள சிறுபான்மை இனம் அந்த நாட்டிலுள்ள பெரும்பான்மை இனத்தால் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கவேண்டும்.இரண்டாவதாக,பிரிவினைக் கோரும் இன மக்கள் தொடர்ச்சியான நிலப்பரப்பில் வாழ்ந்து வரவேண்டும்.இறுதியாக,அந்த இனம் ஒரேமொழியைப் பேச வேண்டும். இந்த மூன்று அடிப்படைகளையும் முன் வைத்து பார்க்கும் போது இலங்கையிலே தமிழ்மொழியை பேசுகிற மக்கள் தொடர்ந்து  சிங்கள பேரினத்தின் அடக்குமுறைக்கு ஆட்படுத்தப்பட்டு வருகிறார்கள்.சம உரிமையற்று,சொந்த பூமியிலேயே இரண்டாம் தர மக்களாக நடத்தப்படுகிறார்கள்.மேலும்,இலங்கையில் தொடர்ச்சியான நிலப்பரப்பில் தமிழர்கள் வாழ்ந்து வருகிறார்கள்.எனவே,ஈழத் தமிழர்கள் தனியாக பிரிந்துப் போகக் கூடிய உரிமையை கொண்டிருக்கிறார்கள்.அந்த வகையில் ஈழம் என்ற நாட்டை தமிழர்களின் தனி நாடாக அங்கீகரிப்பது மட்டுமே நிரந்தர தீர்வாக அமையுமென தமிழக முற்போக்கு மக்கள் கட்சி உறுதியாக கருதுகிறது.அந்த வகையில் இலங்கையில் தமிழினம் வாழ்ந்து வரக்கூடிய ஈழத்தை தனி நாடாக இந்திய அரசு ஏற்றுக் கொள்வதோடு தமிழீழத்துக்கான பொதுவாக்கெடுப்பையும் இந்திய மேற் கொள்ள  தமிழக முற்போக்கு மக்கள் கட்சி பாடுபடும்.

  1. திராவிட இனம் என ஒன்று இல்லையென அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும்.

தமிழர்களின் அடையாளத்தை சிதைத்து மறைக்கும் வகையில் வரலாற்றை திசை திருப்பத் திட்டமிட்டு செயலாற்றி வரும் திராவிட அடிப்படையிலான திராவிட வரலாறுகள் திருத்தப்படுவதோடு, திராவிட இனம் என ஒன்று இல்லையென அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும்.

  1. 16வேலைவாய்ப்புக்கள் பெருக்கப்படும்.

வேலையில்லாத் திண்டாட்டத்தைக் குறைக்க அனைத்து மாவட்டங்களிலும் ஒன்றிய அளவில் சிறு தொழிற் பேட்டைகள் துவங்கப்படும். இன்றியமையாத பொருட்களின் உற்பத்தியும் விநியோகமும் மக்களிடமிருந்தால் வறுமையும்  வேலையில்லாத் திண்டாட்டமும் ஒழியும் என்ற தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின் கொள்கைகளுக்கேற்ப மக்களுக்குத் தேவையான எல்லாப் பொருட்களின் உற்பத்தி முறைக களிலும் மனித‌ ஆற்றலை பெருமளவு பயன்படுத்தும் விதமாக மாற்றி அமைக்கப்படும்.

  1. மாநிலத்தை அளவாகக் கொண்ட ரயில்வே கோட்டங்களை அமைத்தல்

தெற்கு ரயில்வே மண்டலத்தில் தமிழகம் முழுமையாக இருப்பினும் இந்த மண்டலத்தில் சிறு பகுதியாக உள்ள கேரள மாநிலத்தவரின் ஆளுமையில் தான் இந்த மண்டலம் உள்ளது.இதனால்,தமிழ்நாட்டின் நலன்கள் பெருமளவு பாதிக்கப்படுகின்றன.இந்நிலை களையப்பட வேண்டுமானால்,ஒவ்வொரு மாநிலத்தையும்  அளவாகக் கொண்ட ரயில்வே மண்டலங்கள் அமைக்கப்பட வேண்டும்.இதற்காக தமிழக முற்போக்கு மக்கள் கட்சி பாடுபடும்.

  1. நமதுநாட்டுக்கு ஏற்ற பொருளாதாரக் கொள்கை

தற்போது இந்தியாவில் நடைமுறையில் இருந்திடும் அயல்நாடு சார்ந்த பொருளாதார கொள்கையால் முதலாளிகள் மேலும் மேலும்தங்களை வளப்படுத்திக் கொள்ள வாய்ப்பாக அமைந்துள்ளதே தவிர நாட்டில் நிலவிடும் வறுமையையும் வேலையில்லாதிண்டாட்டத்தையும் ஒழித்திட எந்த வகையிலும் உதவவில்லை.எனவே,உலக மயமாக்கக் கொள்கையை ஏற்றுக் கொள்ள வழிவகைசெய்திடும் அனைத்து பன்னாட்டு ஒப்பந்தங்களும் ரத்து செய்யப்பட்டு,தவிர்க்க இயலாத சில துறைகளில் அயல்நாட்டு கூட்டுறவைநாடுவதை தவிர,பிறப் பொருளாதாரக் கொள்கைகள் நமது தேவைகளின் அடிப்படையில் வடிவமைக்கப்படும்.

  1. வடிகால் மாநிலங்கள் உரிமைகளை பாதுகாத்தல் நீர் ஆதாரங்களைப் பெருக்குதல்.

மாநிலங்களுக்கு இடையே ஆன நதிநீர் தகராறுகள் என்பது தீர்க்க முடியாத ஒன்றாக இந்தியாவில் மாறி உள்ளது. நீர்ப்பற்றாக்குறை  இன்றைக்கும் வெவ்வேறு மாநிலங்களில் நிலவி வருகிறது  என்பது உண்மை.இந்நிலையில்  இந்திய நதிகள் இணைப்பு என்பது ஒருவெற்று கூக்குரலாக மாறி உள்ளது.எனவே,வடிகால் மாநிலங்கள் உரிமைகளை பாதுகாத்திடுவதோடு,எல்லா மாநிலங்களிலும் நீர்ஆதாரங்களைப் பெருக்குவதற்கான நிலைப்பாடுகளை தமிழக முற்போக்கு மக்கள் கட்சி மேற்கொள்ளும்.

  1. வேலையற்ற காலங்களில் வாழ்வாதார நிதி

வறுமை என்பது ஒழிக்க முடியாத தன்மையை கொண்டதாக இந்தியாவில் மாறி வருகிறது. இதற்கு அடிப்படையாக நாட்டில்நிலவிடும் வேலையற்றத் தன்மையும் ஒருங்கிணைந்த வளர்ச்சியற்ற பொருளாதார நிலையுமே காரணமாகும்.வேலையற்றத்தன்மையானது மேலும் பெருகுவதற்கு தான் வாய்ப்பு உள்ளதே தவிர குறைந்திட வாய்ப்பு இல்லை என உறுதியாககூறப்படுகிறது.2013ல் உலக வங்கி அறிக்கையின் படி உலகமுழுவதும் வறுமைக் கோட்டிற்கு கீழே வாழ்பவர்களில் மூன்றில் ஒருவர் இந்தியாவில் உள்ளார் எனத் தெரிவிக்கிறது.ஆக்சுபோர்டுவறுமை மற்றும் மனித வளர்ச்சி முயற்சி என்ற அமைப்பின் கணிப்பின் படி இந்தியாவில் 65 கோடி பேர் (மக்கள் தொகையில் 53.7%)  வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளார்கள் எனத் தெரிவிக்கிறது.இந்தியாவில் வளர்ச்சியற்ற பொருளாதார நிலையே நீடிக்குமெனபொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளார்கள்.இந்நிலையில்,வேலையற்று உள்ளவர்கள் நலனைக் கருத்தில் கொண்டு வேலை அளிப்பதைஅடிப்படை உரிமையாக்கப்பட்டு,வேலையற்ற காலங்களில் வாழ்வாதார நிதி மாதந்தோறும் அளிக்கப்படும்.

  1. மாநில எல்லைகள் மறு பரீசிலனை செய்யப்படும்.

இந்திய விடுதலைக்குப் பின்னர் மேற்கொள்ளப்பட்ட மாநில எல்லைகள் நிர்ணயக் குழுவானது ஒரு தலைப்பட்சமாகவும்விதிமுறைகளின்றி செயல்பட்டதால் மாநில எல்லை தகராறுகள் இன்றளவும் இருந்து வருகிறது.குறிப்பாக,மாநில எல்லைகள்வரையறுக்கப்பட்ட போது தமிழ்நாட்டிற்குரிய பகுதிகள் அண்டை மாநிலங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது.இது போல எல்லாமாநிலங்களிலும் நடைப்பெற்று வரும் எல்லை தகராறுகளுக்கு முற்றுப் புள்ளி வைத்திட புதிய மாநில எல்லைகள் மறு பரீசிலனைஅமைக்கப்படுமென தமிழக முற்போக்கு மக்கள் கட்சி தெரிவிக்கிறது.

  1.  அரசியல்சட்டத்திருத்தம்

கீழ்க்கண்டவாறு அரசியல் சட்டத்திருத்தம் செய்யப்படுதல் தேவை எனக் கருதுகிறோம்.
அ) இரு முறைக்கு  மேலாக  சட்டமன்ற,  பாராளுமன்ற  பதவி  வகிப்பதற்குத்  தடை

விடுதலை பெற்றதிலிருந்து இந்திய அரசியல் நடைமுறைகளை பார்வையில் கொள்ளும் போது, சில குடும்பங்கள். இந்திய அரசியலைதங்களின் குடும்பச் சொத்தாகப் பாவித்து முடியாட்சியை நடத்திக்கொண்டிரப்பது தெதியும். இதனால், கொள்கைகள், கோட்பாடுகள்பின்னுக்குத் தள்ளப்பட்டு தனி மனித துதிபாடிகளும் பரம்பரை ஆட்சிக்கு வழி வகுக்கும் குடும்ப ஆட்சி முறைகளும் ஏற்பட்டுள்ளது.இது இந்திய ஜனநாயகத்திற்கு பாதகமாக அமைந்திடும். இந்நிலை மாற வேண்டுமெனில் ஒருவர் இருமுறைக்கு மேலாக சட்டமன்ற,நாடாளுமன்ற பதவி வகிப்பதைத் தடை செய்யப்படும்.
ஆ) பாராளுமன்ற  மேலவையில்  மாநிலங்களுக்கு தேசிய  இனங்களுக்கு  சம உரிமை

மொழி வாரி மாநிலங்களாகப் பிரிக்கப்பட்ட பின்னரும் கூட, பல மாநிலங்களில் மாநிலங்களுக்கிடையே ஆன பல்வேறு பிரச்சினைகள்தீர்க்கப்படாமல் இருப்பதற்கு காரணமாக அமைவது எல்லா தேசிய இனங்களுக்கும், மாநிலங்களுக்கும் சம உரிமை அற்ற முறையில்இந்தியாவின் கூட்டாட்சியின் மையமாக உள்ள பாராளுமன்றம் அமைந்துள்ளது. இதன் காரணமாகத் தான் மாநிலங்களுக்கிடையே ஆனபல்வேறு பிரச்சினைகளில் உறுதியான முடிவு எடுக்க முடியாமல் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. குறிப்பாகச் சொல்லவேண்டுமெனில் தமிழகத்தின் உயிர் நாடிப் பிரச்சினைகளான காவேரி, முல்லைப் பெரியாறு, ஒகேனக்கல், பாலாறு உள்ளிட்டபிரச்சினைகளில் தமிழகம் ஏமாற்றப்படுகிறது. இதற்கு மத்திய அரசின் இயலாத நிலைப்பாடு தான் காரணமாக அமைகிறது.ஏறக்குறைய மக்கள் தொகை அடிப்படையிலேயே பாராளுமன்றத்தின் இரு அவைகளும் அமைக்கப்பட்டு இருப்பதாலேயே இந்தஇயலாத தன்மை ஏற்பட்டுள்ளது. மேலும் ஒரு சில மாநிலங்களுக்குத் தேவைக்கு அதிகமான வகையில் தொடர்ந்து மத்திய அரசின்சலுகைகறும் நிதியும் அளிக்கப்படுவதற்குக் காரணம் மத்திய அரசில் மாநிலங்களுக்கும் தேசிய இனங்களுக்கும் போதுமான சமஉரிமையும், அதிகாரமும் இல்லாமையே ஆகும். எனவே மாநிலங்களவை என்பது மாநிலங்களும், தேசிய இனங்களும் சம அளவில்மறுத்தலிக்கும் வீட்டோ அதிகாரத்துடன் இடம் பெறும் வகையில் மாற்றி அமைக்கப் படும்.

இ) மாநிலங்களுக்கே அதிக அதிகாரங்கள்

மாநிலங்களுக்கு மாற்றப்படவேண்டும். குறிப்பாக பாதுகாப்பு, வெளி விவகாரங்கள், மாநிலங்களுக்கு இடையே உள்ள விவகாரங்கள் தவிர ஏனைய அதிகாரங்கள் மாநிலங்களுக்கு மாற்றப்பட வேண்டும். இந்த துறைகளில் கூட சம்பந்தப்பட்ட மாநிலங்களை கலந்து கொண்டுதான் முடிவு எடுக்க வேண்டுமென்ற வகைச் செய்யப்படும்.

ஈ) பிற மாநிலங்களில் நிலம் வாங்க, வசித்திட தடை செய்தல்

பல மாநிலங்களுக்கு கட்டுப்பாடு இல்லாமல் ஒருவர் சென்று வருவதற்கும், அசையும் மற்றும் அசையா சொத்துக்களை கட்டுப்பாடு இல்லாமல் வாங்குவதற்கு வழிவகை இருப்பதால் தீவரவாத செயல்கள் பரவுவதற்கு ஏதுவாக உள்ளது. கள்ளப்பணம் பெருகாமல் தடுக்கவும் அந்தந்த மாநிலங்களில் வாழும் மக்கள் தங்களின் அடிப்படையை இழந்திடாமல் தடுக்கவும் பிற மாநிலத்தவர் இன்னொரு மாநிலத்திள்கு தகுந்த காரணமின்றி செல்லவும், வசிடத்திடவும் தடை விதிக்கப்படும். இந்தியாவின் ஒரு மாநிலமான காஷ்மீருக்கு அரசியல் சாசன சட்ட விதி 370 ன் படி அளிக்கப்பட்டுள்ள அதே உரிமைகள் எல்லா தேசிய இனங்களுக்கும் அவரவர் மாநிலத்தில் அளிக்கப்படும் வகையில் அரசியல் சாசன சட்டம் திருத்தப்படும்.

உ) ஆளுநர் பதவி நீக்கம்

தேசிய இனங்கனின் கூட்டாட்சியாக உள்ள இந்தியாவில் மாநில ஆட்சிகளை அதிகாரம் செலுத்த ஒருவரை ஆளுநர் ஆக நியமிப்பது பொருத்தமாக இருக்ககாது என்ற அடிப்படையில் ஆளுநர் பதவியை நீக்கம் செய்யப்படும்.

.ஊ) நீதித்துறை மற்றும் அரசியல் சட்டப் பதவிகளுக்கு நியமனங்களுக்கு வெளிப்படையான நியமன முறை

உச்ச நீதிமன்ற நீதிபதிகள், தேர்தல் ஆணையர்கள் போன்ற பதவிகளுக்கு நியமன முறை வெளிப்படையான முறையில் நடைபெறும் வகையில் இந்தப் பதவிகளுக்கு பரிந்துரைக்கப்படும் பெயர்கள் அறிவிக்கப்பட்டு அவர்களின் தகுதி, திறமை, ஒழுக்கம் பற்றி இந்தியர்கள் யார் வேண்டுமென்றாலும் கருத்து தெரிவிக்கவும் அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு பொருத்தமானவர்கள் நியமிக்கப் படுவார்கள்.


  1. ஏனைய திட்டங்கள்

1)        உச்ச நீதிமன்ற கிளையை சென்னையில் அமைத்தல்

2)         சுற்றுப்புற சூழலை பாதுகாத்தல்

4)        கப்பல், விமான போக்குவரத்துக்களை மாநில அதிகாரத்திற்கு கொண்டு வருதல்

5)        உயர் நீதி மன்றங்களில் அந்தந்த மாநில மொழிகளே நீதிமன்ற மொழியாக்கப்படும்.

6)        அனைத்து தேசிய இன மொழிக‌ளும் ஆட்சி மொழி ஆக்கப்படும்.

7)        எல்லா மாநிலங்களும் சம அளவில் மத்திய அரசின் நிதி திட்டங்கள் மற்றம் ரயில்வே திட்டம் ஒதுக்கீடுகளுக்கு ஏற்ப நடைமுறைகள் மாற்றப்படும்.

8)        விவசாயிகளுக்கு குறைந்த விலையில் இடு பொருள்கள், வட்டி இல்லா கடன், சில்லரை வணிகத்தில் வெளி நாட்டு முதலீட்டுக்கும் பெரு முதலாளிகளுக்கும் தடை.

9)        பெரும்பான்மையோர்க்கு வேலைவாய்ப்பாகவும், கிராமங்களில், சிறு நகரங்களில் முக்கிய பங்காற்றிடும் சில்லரை வணிகத்தில் வெளி நாட்டு முதலீட்டுக்கும், பெரு முதலாளிகளுக்கும் தடை விதிக்கப்படும். மேலும் பிற மாவட்டத்தைச் சார்ந்தவர்கள் அடுத்த மாவட்டங்களில் சில்லரை வணிகத்தில் முதலீடு செய்வதற்கு தடை விதிக்கப்படும்.

10)         60 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்கப்படும்.

11)         மக்கள் நல் வழி பயிற்சி தற்போதைய உலக பொருளாதார சமூக அறிவியல் தளமானது ஒரு நாட்டினுடைய குடிமகனை நாட்டின் மீது அக்கறை, நாட்டிற்கு ஆற்ற வேண்டிய ,தான் சார்ந்து இருக்கக்கூடிய மொழி, இனம் பற்றிய அக்கறை இல்லாமல் இருப்பதும், தனிமனித ஒழுக்கம் , சமுதாய கடமைகள் பற்றிய சிந்தனை இல்லாமல் இருப்பதும் பொதுவாக இருக்கக்கூடிய தன்மையாக இன்றைக்கு இருக்கிறது. இதன் காரணமாக நாட்டில் நிலவிடும் ஊழல், இலஞ்ச லாவண்யம், ஒழுக்கக் கேடுகள் பற்றி எத்தகைய அக்கறை இல்லாமல், பொறுப்பற்றத் தன்மையில், தங்களுக்கும் , நாட்டுக்கும் ,சமுதாயத்திற்கும் ஏற்றவர்களாக இளைஞர்கள் இல்லாமல் இருப்பதும் நிலவி வருகிறது. இந்நிலையைப் போக்கிட பள்ளிக் கல்வி இறுதித் தேர்வுக்குப் பின்னர் தேசிய இன, மொழி பற்றுடன் கூடிய தனி மனித ஒழுக்க நெறிப் பயிற்சி வகுப்புகளை கட்டாயமாக்குவது.

இத்தகைய செயல் திட்டங்கள் நிறைவேறிட தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின் வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டுகிறோம்.

Visit: www.tmmkatchi.com

Email: [email protected]

Author: Secretary, TMMK

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *