
தமிழர் பண்பாட்டையும் மீட்டிட
திராவிட மாயையிலிருந்து தமிழர்களை காத்திட
பொங்கலில் உறுதி எடுப்போம்.
பொங்கல் வாழ்த்துச செய்தி
க.சக்திவேல் ,
தலைவர்,
தமிழக முற்போக்கு மக்கள் கட்சி.
தமிழர்கள் தனி இனமாக உயர்ந்த நாகரீகத்தோடும் வீரத்தோடும் நாடுகளை ஆண்ட இனமாக இருந்த நிலை மாறி தங்களின் தமிழ்த் தேசிய, பண்பாட்டு அடையாளங்களை இழந்து வரும் இனமாக மாறி வருகிறார்கள். தமிழினம் என்ற அடையாளத்திற்கு மாற்றாக இல்லாத திராவிட அடையாளங்கள் தமிழர்களையும் தமிழ்நாட்டையும் ஆக்கிரமித்துள்ளன. மேலும், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் எத்தகைய முன்னெடுப்பையும் இவர்கள் செய்வதில்லை. இத்தகைய நிலையில் தமிழகத்தில் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி இருந்தாலும் வறுமையும் வேலையில்லா திண்டாட்டமும் மட்டுமின்றி லஞ்ச லாவண்ய மாநிலமாக தமிழகம் மாறியுள்ளது.
எனவே, தமிழ்த் தேசிய இனம் தனது தமிழ்த் தேசிய, பண்பாட்டு அடையாளங்களை மீட்டெடுக்கவும் வறுமை, வேலையில்லா திண்டாட்டத்தை ஒழிக்கவும் உறுதி ஏற்போம் என்ற நிலையில் தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவண்
க.சக்திவேல்,
தலைவர்,
தமிழக முற்போக்கு மக்கள் கட்சி.