
01-02-2025
பத்திரிக்கை செய்தி
மத்திய பட்ஜெட் 2025-26, தேர்தல் அறிக்கையாக உள்ளது.
மத்திய பட்ஜெட்டில் பெரிய நோக்கங்கள் உள்ளது.அடைந்திட வழிமுறைகள் இல்லை.
திருவள்ளுவரைத் தவிர தமிழகத்திற்கு என்று சிறப்பாக ஏதுமில்லை.
க.சக்திவேல்,
தலைவர்,
தமிழக முற்போக்கு மக்கள் கட்சி
மத்திய அரசின் 2025-26 பட்ஜெட்டில் வேலை வாய்ப்பு, வறுமை ஒழிப்புக்கு என்று எந்த திட்டமும் இல்லை. கடந்த பத்தாண்டு பாஜக அரசின் பயணத்தை கூறி இருந்தாலும் அதிலும் பெரிதாக ஒன்றும் இல்லை.கிராமப் புற வேலை வாய்ப்பை பெருக்க புதிய திட்டங்கள் இல்லை.நடுத்தர தொழில் வளர்ச்சிக்கு பல திட்டங்கள் முன் வைக்கப்பட்டுள்ளது ஆனால், அவைகள் பெரு நகரங்கள் சார்ந்த தொழில் வாய்ப்புக்கள் தான் இருக்குமே தவிர கிராம புறத்திற்கு வாய்ப்புகள் குறைவு.
விவசாயத்தை பெருக்க வேண்டும் என நோக்கமாக முன்னுரையில் கூறப்பட்டாலும் அதே நேரத்தில் விவசாயிகள் தங்கள் சொந்த கால்களில் நிற்பதற்கான வாய்ப்புகள் இந்த பட்ஜெட்டில் உருவாக்கப்படவில்லை என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது. விவசாய பொருட்களுக்கு ஆதார விலை போதுமான அளவு உயர்த்தப்பட அடிப்படைகள் முன் வைக்கப்படவில்லை. கிராமப் புற 100 நாள் வேலைத் திட்டத்திற்கு நிதி போதுமான அளவு ஒதுக்கப்படவில்லை. இதன் காரணமாக , மிகப்பெரிய அளவில் கிராமப்புற வேலை வாய்ப்பின்மை உள்ள போது, அதை நீக்கக் கூடிய திட்டங்கள் எதையும் பார்க்க முடியவில்லை.
கூறப்பட்டுள்ள பெரிய நோக்கங்களை அடைய திட்டங்கள் இல்லை.
மத்திய அரசினுடைய பட்ஜெட் வளர்ச்சி அதுபோல நடுத்தர மக்களின் உடைய வாங்கும் சக்தியை அதிகரிப்பது, குடும்ப எண்ணங்களை உயர்த்தி பிடிப்பது ஒரு பக்கம் பெரிய எண்ணங்களோடு அறிவிப்பு என்பது இருந்தாலும் இந்த அறிவிப்புக்கு ஏற்ற முறையில் மத்திய அரசு வரவு செலவு பட்ஜெட் இருக்கிறதா என்றால் இல்லை என்று தான் கூற வேண்டும்.
தேர்தல் அறிக்கை போன்று உள்ளது.
வறுமையை ஒழித்தல், தரமான கல்வி, முழுமையான சுகாதாரம், திறன் உடையவர்களுக்கான உண்மையான வேலைவாய்ப்பு, 70% பெண்களுக்கு வாய்ப்புகள், இந்தியாவை உலகத்தில் உணவு உற்பத்திக்கான இடமாக மாற்றுவதற்கு விவசாயிகளுக்கு ஆதரவு இப்படி உயர்ந்த நோக்கங்களை இந்த மத்திய அரசினுடைய 2025-26 வரவு செலவு கணக்கு கூறினாலும் கூட இதையெல்லாம் அடையக்கூடிய வகையில் பட்ஜெட்டின் திட்டங்கள் இருக்கிறதா என்று பார்த்தால் ஏமாற்றங்கள் தான் மிஞ்சுகின்றன. அதை அடைவதற்காக வரவு செலவு திட்டத்தில் முன் வைத்துள்ள அந்த 10 அடிப்படைகளையும் உற்றுப் பார்த்தால் இது வரவு செலவு திட்டமா? அல்லது ஒரு தேர்தல் அறிக்கையா என்று கூட எண்ணத் தோன்றுகிறது.திருக்குறளை எடுத்துரைத்துள்ளதை வரவேற்கிறோம்.ஆனால், அது தவிர, தமிழகத்திற்கு என்று ஏதுமில்லை.
இவண்
க.சக்திவேல்,
தலைவர்,
தமிழக முற்போக்கு மக்கள் கட்சி.
மின்னஞ்சல்: [email protected]
இணையதளம்: www.tmmkatchi.com
Youtube Link: https://www.youtube.com/@tmmkatchi-315/featured