
அன்புடையீர் வணக்கம்,
எல்லா வகையான அரசு புறம்போக்கு நிலங்களில் பல்லாண்டு காலமாக குடியிருந்து வரும் மக்களுக்கு அந்த குடியிருப்பு நிலங்களை உரிமையாக்கிட சட்டமிற்ற, மக்கள் தொகை அடிப்படையற்ற நாடாளுமன்ற தொகுதி சீரமைப்பு குறித்து மத்திய அரசை தமிழக முற்போக்கு மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது. இது குறித்து தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின் தலைவர் க.சக்திவேல் பத்திரிகையாளர்களை சந்தித்து கருத்துகளை தெரிவிக்க உள்ளார். எனவே, இது குறித்து செய்தி சேகரிப்பதற்காக தங்களது நிறுவனத்திலிருந்து செய்தியாளரையும், புகைப்படக் கலைஞரை-ஒளிப்பதிவாளரையும் அனுப்பி வைக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.
நாள் | 12.04.2025 சனிக்கிழமை |
நேரம் | பகல் 11 மணி |
இடம் | சென்னை பிரஸ் கிளப்,
சேப்பாக்கம், சென்னை. |
இப்படிக்கு
பேரன்புடன்,
செயலாளர்