
நாடாளுமன்றத் தொகுதிகளின் மறுசீரமைப்பில் தென்னிந்தியாவிற்கான நீதி – கருத்தரங்க செய்திகளும் தீர்மானங்களும்.
தமிழக முற்போக்கு மக்கள் கட்சி சார்பாக ” நாடாளுமன்றத் தொகுதிகளின் மறுசீரமைப்பில் தென்னிந்தியாவிற்கான நீதி – கருத்தரங்கம்”, 13.07.2025, காலை 10.30 மணிக்கு சென்னை, தி.நகர், வெங்கட்நாராயணா சாலை தக்கர் பாபா அரங்கில் நடைபெற்றது. தமிழக முற்போக்கு மக்கள் கட்சித் தலைவர் க.சக்திவேல் தலைமையில் ஒசாமானிய பல்கலைக்கழக சட்டத் துறையின் முன்னாள் தலைவர் பேராசிரியர், டாக்டர் காலி வினோத் குமார் LLM, P.hd, சிறப்புரையாற்றினார். இயக்குனர் வி.சேகர், தேசிய மக்கள் சக்தி கட்சித் தலைவர் M.L..ரவி, உள்ளிட்டவர்கள் உரையாற்றினார்கள்.
இந்த கருத்தரங்கில் கீழ்க் கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
- தென் மாநிலங்களில் மக்கள்தொகை பெருக்கத்தை ஊக்குவிப்பதாலோ, அல்லது இந்தி பேசும் மாநிலங்களில் கடுமையான குடும்பக் கட்டுப்பாடு முறைகள் மேற்கொள்ளவேண்டுமென்பதாலோ, சீரற்ற மக்கள்தொகை பெருக்கத்தை உடனடியாக சரிசெய்ய முடியாது, எனவே, தென் மாநிலங்களுக்கு அவர்களின் அரசியல் உரிமைகளைப் பாதுகாக்க முழுமையான பாதுகாப்புத் திட்டம் அறிவித்து செயல்படும் வரை, எந்தவொரு நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பை யும் தள்ளி வைக்கவேண்டுமென மத்திய அரசை வேண்டி கொண்டது.
- ஒவ்வொரு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையிலும் நாடாளுமன்ற தொகுதி மறு சீரமைப்பை வலியுறுத்தும் இந்திய அரசியலமைப்பின் 82வது பிரிவில் மக்கள் தொகை அடிப்படை என்பதை நீக்க திருத்தம் செய்திட வெண்டும்.
- இந்தியா ஒரு கூட்டாட்சி நாடாக இருப்பதால், இந்திய நாடாளுமன்றத்தின் மேல் மற்றும் கீழ் அவைகள் இரண்டும் அனைத்து மாநிலங்களுக்கிடையில் சம விகிதத்தில் சமமாகப் பிரிக்கப்பட வேண்டும்.
* 1971 மக்கள் தொகை அடிப்படையை கொண்ட தொகுதி சீரமைப்பை மேலும் 30 ஆண்டுகளுக்கு மேற்கொள்ளும் முறை நிரந்தர தீர்வாக அமையாது என்றும் தீர்மானித்தது.