2026ஆம் ஆண்டு அமைந்திட வேண்டும்.
க.சக்திவேல்
தலைவர்
தமிழக முற்போக்கு மக்கள் கட்சி
தமிழர்களுக்கு நிறைவான மகிழ்ச்சி தரும் ஆண்டாக
2026ஆம் ஆண்டு அமைந்திட வேண்டும்.
க.சக்திவேல்
தலைவர்
தமிழக முற்போக்கு மக்கள் கட்சி
வளர்ச்சி அடைந்த மாநிலம் ஒருபுறம் மறுபுறம் 2025ஆம் ஆண்டு அதிக நிறைவும் அதிக கசப்பும் அற்ற ஆண்டாக தமிழக மக்களுக்கு அமைந்துவிட்டது. ஊழல் லஞ்ச லாவண்யங்கள், தொடர்ந்து உயர்ந்து வரும் தமிழக அரசின் கடன் சுமைகள், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிவு, வேலை வாய்ப்பற்ற நிலை என தமிழர்களை நிலைகுலைய செய்துவிட்டன. இதன் காரணமாக, தமிழக மக்களுக்கு எதிர்கால வளர்ச்சி சிதைவடைந்த நிலையில், 2025 ஆம் ஆண்டு நிறைவு பெறுகிறது. இருப்பினும், இந்த சோதனைகளை எதிர்கொள்ள இன்னும் வலுவான அரசியல் தலைமை தமிழகத்திற்கு தேவைப்படுகிறது என்பது நமக்கான படிப்பினைகள் தந்து உள்ளன. தமிழகத்தில் நிலவி வரும் வறுமையும் வேலையற்ற தன்மையும் முழுமையாக நீக்கப்பட உறுதி மேற்கொள்ள வேண்டிய தருணம் இது.
தமிழர் வாழ்வியலில் புதிய நம்பிக்கை விதையை தூவிட 2026 ஆண்டு விளங்கிடும் என்ற எதிர்பார்ப்புடன் வரவேற்று தமிழக முற்போக்கு மக்கள் கட்சி சார்பாக புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
க.சக்திவேல்,
தலைவர்,
தமிழக முற்போக்கு மக்கள் கட்சி.