பொங்கல் வாழ்த்து செய்தி

க.சக்திவேல் ,

தலைவர், தமிழக   முற்போக்கு   மக்கள்   கட்சி

தமிழர்  பண்பாட்டை  மீட்டிட,  எளிய மக்களுக்கான அரசியல் உருவாகிட‌

பொங்கல் திருநாளில்  உறுதி ஏற்போம்.

பொங்கல் வாழ்த்து செய்தி

க.சக்திவேல் ,

தலைவர்,

தமிழக   முற்போக்கு   மக்கள்   கட்சி.

கடந்த ஆறு காலமாகவே ஒன்பது மாதங்களுக்கு பின்னர் வரப் போகும் மாநிலத் தேர்தலுக்காக யாருடன் யார் கூட்டணி என்பது மட்டுமே பேசப் பொருளாக தமிழகத்தில் கட்டமைக்கப்பட்டு அரசியல் செயல்பாடுகளை பணம் படைத்த அரசியல் கட்சிகள், ஊடகங்களை வைத்து உருவகப்படுத்தி வருகிறார்கள். இதற்கான மாநாடுகள், கூட்டங்கள் பணம் செலவழித்து கூட்டப்படுகிறதே தவிர மக்களின் பிரச்சனைகளை முன் வைக்கப்படவில்லை. 50,60 ஆண்டுகளாக எளிய மக்கள் வாழ்ந்து வந்த வீடுகளிலிருந்து அரசு புறம்போக்கு,நீர்நிலை,மேய்ச்சல் என்ற காரணங்களால் வெளியேற்றப்படுகிறார்கள், அரசு ஊழியர்கள் போராட்டங்கள், வேலை வாய்ப்ப‌ற்ற இளைஞர்கள், வறுமை, போதை பொருள் நடமாட்டங்கள்  இப்படி மாநிலம் முழுவதும் காணப்படுகிறது. ஆனால், இவற்றைப் பற்றிய எண்ணங்கள் பெயரளவில் கரைந்து போகின்றன. மறுபுறம், சாதீய, மத வாத‌ கட்சிகள் பெருமளவில் பெருகி மற்ற சிந்தனைகளை புறம் தள்ளுகின்றன‌ . அது மட்டுமின்றி, இக்கட்சிகளின் கூட்டணியே தேந்ர்தல் கால சிந்தனையாக மாறி உள்ளது. மேலும், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் எத்தகைய முன்னெடுப்பையும் ஆண்ட கட்சிகள் என்று கூறுபவைகள் எந்த ஒரு நிலையான புதிய செயலிலும் ஈடுபடுவதில்லை. இத்தகைய  நிலையில்  தமிழகத்தில் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி இருந்தாலும் வறுமையும் வேலையில்லா திண்டாட்டமும் மட்டுமின்றி  லஞ்ச லாவண்ய மாநிலமாக  தமிழகம்  மாறியுள்ளது.

எனவே,   தமிழ்த் தேசிய இனம் தனது   தமிழ்த்  தேசிய, பண்பாட்டு அடையாளங்களை மீட்டெடுக்கவும் வறுமை, வேலையில்லா திண்டாட்டத்தை ஒழிக்கவும்   உறுதி   ஏற்போம் என்ற நிலையில் தமிழர் திருநாளாம்   தைப்பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக்  கொள்கிறேன்.

இவண்

க.சக்திவேல்,

தலைவர்,

தமிழக  முற்போக்கு  மக்கள்   கட்சி.

[email protected]

www.tmmkatchi.org

 14.01.2026.

Author: Secretary, TMMK

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *