
புதிய பார்வை அணியும் கூலித் தொழிலாளர் சங்கமும் இணைந்து ஏழை மக்களுக்கான அதிகாரம் குறித்த கருத்தரங்கம் கோவையில் 29-121-2020 ஞாயிறு காலை நடைபெற்றது. தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின் தலைவரும் புதிய பார்வை அணியின் முதல்வர் வேட்பாளருமான க.சக்திவேல் , தேசிய மக்கள் சக்தி கட்சித் தலைவரும் புதிய பார்வை அணியின் துணை முதல்வர் வேட்பாளருமான எம்.எல்.ரவி, இந்திய திராவிட மக்கள் முன்னேற்றக் கட்சியின் தலைவரும் புதிய பார்வை அணியின் துணை முதல்வர் வேட்பாளருமான வீரா.சிதம்பரம், புதிய பார்வை அணியின் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் சிவஞானசம்பந்தம் அவர்களும் கலந்துக்கொண்டு உரையாற்றினார்கள். அது போழ்து, எளிய அரசியலே ஏழை எளிய மக்களுக்கு அரசியல் அதிகாரத்தை பெற்று தருவது மட்டுமின்றி எளிய ஏழை மக்களுக்கான தேவைகளும் நிறைவேற்ற வாய்ப்புள்ள சூழ்நிலையை உருவாக்கும் என்று தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின் தலைவர் க.சக்திவேல் உரையாற்றினார்.