தைப் பொங்கலில் தமிழர்களுக்கு நிறைவான மகிழ்ச்சியை அளித்திட வழிப் பிறக்கும்.
தமிழக முற்போக்கு மக்கள் கட்சித் தலைவர்
க.சக்திவேல்
பொங்கல் வாழ்த்து செய்தி
தமிழர்கள் தனி இனமாக உயர்ந்த நாகரீகத்தோடும் வீரத்தோடும் நாடுகளை ஆண்ட இனமாக இருந்த நிலை மாறி நாடற்ற இனமாக வாழ்ந்து வருவது மட்டுமின்றி தங்களின் தமிழ்த் தேசிய,பண்பாட்டு அடையாளங்களை இழந்து வரும் இனமாக மாறி வருகிறார்கள்
இத்தகைய நிலையில் தமிழர்களின் தாயகமான தமிழகத்தில் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி இருந்தாலும் வறுமையும் வேலையில்லா திண்டாட்டமும் மட்டுமின்றி லஞ்ச லாவண்ய மாநிலமாக தமிழகம் மாறியுள்ளது.. இந்த நிலை மாற்றப்பட வேண்டும். அதற்கான வாய்ப்பாக வர இருக்கின்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் அமைந்துள்ளது. அதற்கான புரிதலை இந்த தை பொங்கல் வழி காட்டும் என நம்புகிறோம்.
எனவே,, தமிழ்த் தேசிய இனம் தனது தமிழ்த் தேசிய, பண்பாட்டு அடையாளங்களை மீட்டெடுக்கவும் நேர்மையான ஆட்சித்தலைமையை தமிழர்களின் தாயகமான தமிழகத்தில் உருவாக்கவும் வறுமை, வேலையில்லா திண்டாட்டத்தை ஒழிக்கவும் உறுதி ஏற்போம் என்ற நிலையில், தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் வாழ்த்துக்களை உலகம் முழுவதும் வாழ்ந்து வரும் தமிழர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்..
க.சக்திவேல்,
தலைவர்,
தமிழக முற்போக்கு மக்கள் கட்சி.