
01-02-2021
பத்திரிக்கை செய்தி
மத்திய அரசின் 2021 பட்ஜெட் தனியார் மயத்தை ஊக்குவிக்கும்,
வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்புக்கு ஏதுமில்லாத பட்ஜெட்.
தமிழக முற்போக்கு மக்கள் கட்சித் தலைவர்
க.சக்திவேல் அறிக்கை.
மத்திய அரசின் 2020௨021 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் பெரும்பாலும் தனியார் மயமாக்கலுக்கு சாதகமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மிகப்பெரிய அளவில் வேலை வாய்ப்பின்மை உள்ள போது, அதை நீக்கக் கூடிய திட்டங்களாக எதையும் பார்க்க முடியவில்லை.புதிய சைனிக் பள்ளிகள் தனியார் துறையினர் மூலமாக அமைக்கப்படும் என்பதும், எல்லா ஆசியர்களின் தகுதியையும் ஒரே தேசிய அள்வில் நிர்ணயம் செய்யப்படுமென்பதும் ஏற்க முடியவில்லை.
விவசாயிகளுக்கும் வேளாண்மைக்கும் திட்டங்கள் கூறப்பட்டு இருந்தாலும் வார்த்தை ஜாலங்கள் உள்ளதே தவிர விவசாயிகளுக்கு உதவுமா என்பது கேள்விக்குறி தான்.
வேலை வாய்ப்புக்களை பெருக்க எந்த உருப்படியான திட்டமும் இல்லை. வளர்ச்சிக்கு ஏதுமில்லாத வார்த்தை ஜாலங்களை கொண்டு கோர்க்கப்பட்ட பட்ஜெட்டாகத் தான் உள்ளது.
க.சக்திவேல்,
தலைவர்,