
சட்டமன்றத் தேர்தல் வருவதற்கு முன்பும் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பும் புதிய பார்வை கூட்டணி சார்பில் முதல்வர் மற்றும் துணை முதல்வர் வேட்பாளர்கள் புதுக்கோட்டையில் பிரச்சாரம் செய்தனர் தமிழக முற்போக்கு மக்கள் கட்சி தேசிய மக்கள் சக்தி கட்சி இந்திய திராவிட மக்கள் முன்னேற்ற கட்சி இணைந்து 2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்காக ஏற்படுத்திய புதிய பார்வை கூட்டணியின் சார்பாக இன்று புதுக்கோட்டையில் முதல்வர் வேட்பாளர் சக்திவேல் துணை முதல்வர் வேட்பாளர்கள் ரவி மற்றும் சிதம்பரம் ஆகியோர் உழவர் சந்தை புதிய பேருந்து நிலையம் பகுதிகளில் பிரச்சார பயணத்தை மேற்கொண்டு சிறப்புரையாற்றினார்கள் வறுமை ஒழிந்திட வேலையில்லா திண்டாட்டம் நீங்கிட ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைத்திட வெளிப்படையான ஆட்சி முறை அனைத்து நிலைகளிலும் இலவசக்கல்வி எல்லாவித மருத்துவமும் இலவசம் பூரண மதுவிலக்கு வாரிசு அரசியல் ஒழிந்திட உள்ளிட்ட வாக்குறுதிகளை வைத்து பிரச்சாரத்தில் ஈடுபட்டனர் இந்த பிரச்சாரத்திற்கு புதிய பார்வை கூட்டணி நிர்வாகிகள் மற்றும் பெண்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பிரசுரங்களும் வழங்கினார்கள் இந்த பிரச்சாரத்தில் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் சிவஞான சம்பந்தம் பிரபாகரன் ஜெய கண்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்