
வார இதழ் உதயன் கனடா நாட்டில் துவங்கி 25 ஆண்டு நிறைவடைந்து உள்ளது. இந்த வார இதழை துவங்கி நடத்தி வரும் திரு.லோகேந்திலிங்கம் முப்பரிணாமம் கொண்டவர்.கவிஞர், எழுத்தாளர்,பேச்சாளர் என்ற முப்பரிணாமம் கொண்டவர். மிகுந்த இன்னலுக்கு இடையே உதயன் வார இதழை துவங்கி இன்றைக்கு 25 ஆண்டுகாலங்களை நிறைவு செய்துள்ளார். உதயன் வார இதழையும் திரு.லோகேந்திரலிங்கத்தின் சீரிய தமிழ்ப் பணியையும் தமிழக முற்போக்கு மக்கள் கட்சி பாராட்டுகிறது.