
22-02-2021
பத்திரிக்கை செய்தி
தமிழக இடைக்கால வரவு செலவு திட்டத்தில் வளர்ச்சிக்கோ தமிழகத்தின் நன்மைக்கோ ஏதுமில்லை.
எதிர் பார்ப்புக்களை பொய்யாக்கி உள்ளது.
தமிழக முற்போக்கு மக்கள் கட்சித் தலைவர் க.சக்திவேல் அறிக்கை.
இடைக்கால வரவு செலவு அறிக்கையாக இருந்தாலும் கொஞ்சம் அதிகமாகவே தமிழக மக்கள் தமிழக அரசின் நிதி அமைச்சர் திரு.ஒ.பன்னீர்செல்வத்திடம் எதிபார்த்து இருந்தனர்.. அதனை, தமிழக நிதி அமைச்சர் பொய்யாக்கி உள்ளார்.
தமிழக இடைக்கால வரவு செலவு திட்டத்தில் வளர்ச்சிக்கோ, தமிழகத்தின் நன்மைக்கோ ஏதுமில்லை.. வேலை வாய்ப்பை பெருக்கவோ, விவசாயத்திற்கென்று பெரிதாக ஒன்றுமில்லாத வரவு செலவு திட்டம். விசைதறி, , கைத்தறி நெசவாளர்களின் பெரிய பிரச்சனையாக உள்ள நூல் விலை குறைப்பிற்கென்று குறிப்பிட்டு எதேனும் சொல்லப்படவில்லை.
மது மற்றும் பெட்ரோல் டீசல் மீதான வரி தான் தமிழகத்தின் வரி போல தெரிகிறது அதனால் தான் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்தாலும் கூட தமிழ்நாடு அரசு பெட்ரோல் டீசலில் உள்ள மாநில வரியை குறைக்க எந்த விதமான அறிவிப்பை செய்யவில்லை. அதேபோல பூரண மதுவிலக்கை பற்றிய எந்த அறிவிப்பும் இந்த தமிழ்நாடு அரசினுடைய வரவு செலவுத் திட்டத்தில் இல்லை..
ஏறக்குறைய 5 லட்சம் கோடியை தமிழ்நாடு அரசினுடைய கடன் நெருங்கி விட்ட போதிலும் மேலும் 84 ஆயிரம் கோடி கடன் பெறுவதற்கான வாய்ப்புகளை இந்த 2021-22 வரவு- செலவுத் திட்டம் பரிந்துரைத்துள்ளது. தமிழ்நாடு கடன் சுமை பெருகுவதை அரசு தடுக்க முயற்சிக்க வேண்டும். மத்திய அரசு தர வேண்டிய வரி நிலுவை களைப் பெற்று இருந்தால் கூட இந்த கடன் சுமை பெருகாமல் பார்த்துக் கொண்டிருக்கலாம்..
மத்திய அரசு செஸ் மற்றும் சர்சார்ஜ் மூலமாக வரிகளை மறைமுகமாக வசூலிப்பதால், மாநில பங்கு குறைந்து வருகின்றன என்ற குற்றச்சாட்டை தைரியமாக நிதியமைச்சர் வைத்திருக்கிறார்., அதற்காக பாராட்டலாம் அதேபோல முந்தைய மத்திய வரவு- செலவு பரிந்துரைப்படி தமிழகத்துக்கு தர வேண்டிய நிதியையும் குறைத்து இருப்பதும் பற்றியும் கூறி உள்ளது வரவேற்கத்தக்கது.
2030 ஆம் ஆண்டு முழுக்க மின்சார மயமாக்கப்பட்ட போக்குவரத்தை மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டிருக்கும் நிலையில், 12000 பேருந்துகளை வாங்குவது என்றும் அதில் 2000 பேருந்துகள் மட்டுமே மின் பேருந்துகள் என்று அறிவித்திருப்பது ஆச்சரியமாக உள்ளது.
ஒட்டு மொத்தத்தில் மக்களுக்கு ஒன்றுமில்லை இந்த தமிழக அரசின் இடைக்கால வரவு செலவு அரறிக்கையில் என்பது நிதர்சனமான உண்மை.
க.சக்திவேல்,
தலைவர்,
தமிழக முற்போக்கு மக்கள் கட்சி.
www.tmmk.website