
காவிரி நீரை போதுமான அளவு தேக்கி வைத்து உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நீரை மறுத்துவரும் கர்நாடக காங்கிரஸ் ஆட்சி தொடர்ந்து தமிழகத்தில் குறுவை சாகுபடிக்கான குறைந்த பட்ச காவிரி மேலாண்மை வாரியத்தின் ஆணைகளை கூட மதிக்கவில்லை என்பது வேதனையான ஒன்று. கடைசியாக காவிரி மேலாண்மை வாரியம் 3000 கன அடி அக்டோபர் 15 வரை தமிழகத்திற்கு தர வேண்டுமென சொன்னதை கூட கர்நாடக காங்கிரஸ் ஆட்சி முழுமையாக தரவில்லை. இதன் காரணமாக லட்சக்கணக்கான ஏக்கரில் பயிர் செய்யப்பட்டுள்ள தமிழக காவிரி டெல்டா குறுவைப் பயிர்கள் வாடி வதங்கிடும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கர்நாடக காங்கிரஸ் ஆட்சிக்கு அழுத்தம் தரக்கூடிய வகையில் அந்த காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி வைத்திருக்கக்கூடிய திராவிட முன்னேற்ற கழகம், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, சிபிஐ, சிபிஎம் கட்சிகள் அந்த கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும் என்ற நிபந்தனை விதித்தால் தமிழகத்தினுடைய காவிரி டெல்டா விவசாயிகளுக்கு தீர்வு காண ஒரு வழிவகை ஏற்படும். ஆனால் அதை செய்திடாமல் கர்நாடகத்தில் இருக்கக்கூடிய காங்கிரஸ் ஆட்சியை காப்பாற்றுவதும் அந்த கூட்டணிக்கு எந்த பாதகமும் இல்லாமல் இந்த பிரச்சனையை அணுகப் பார்க்கும் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் தமிழகத்தில் இருக்கக்கூடிய காவிரி டெல்டா விவசாயிகளைப் பற்றி கிஞ்சிற்றும் கவலைப்படவில்லை என்பது வெட்ட வெளிச்சமாக உள்ளது.
இந்நிலையில், தமிழக திமுக அரசானது கண்துடைப்பாக நிவாரணம் அளிக்கப்படும் என்று கூறிய கூறி அத்தகைய நிவாரணம் கூட மிக குறைந்த நிவாரணமாக ஒரு ஏக்கருக்கு ரூ. 5463 அளிப்பதாக அறிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள விவசாய பல்கலைக்கழகமானது ஒரு ஏக்கருக்கு பயிர் செய்ய ரூ. 34,803 செலவு செய்ய வேண்டியுள்ளது என்று கூறியுள்ள நிலையில் ஏக்கருக்கு ரூ. 5463 என்பது விவசாயிகளின் குறைகளை தீர்ப்பதற்கு இல்லாமல் கண் துடைப்பாக செய்யப்பட்ட செயலாகத்தான் பார்க்க வேண்டியுள்ளது. தமிழகத்தை ஆளக்கூடிய திமுக செய்யக் கூடிய ஒன்று காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வெளியேறி அதன் மூலம் கர்நாடக காங்கிரஸ் அரசை வலியுறுத்தி அதன் வழியாக காவிரி நீரை பெற்று வாடிடும் குறுவை பயிர்களை காப்பாற்றலாம். அல்லது ஒவ்வொரு காவிரி டெல்டா விவசாயிக்கும் தமிழக அரசு ஒரு ஏக்கருக்கு ஒரு லட்ச ரூபாய் நிவாரணம் அளிக்க வேண்டும் என தமிழக முற்போக்கு மக்கள் கட்சி சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.
க.சக்திவேல்,
தலைவர்
தமிழக முற்போக்கு மக்கள் கட்சி
Whatsapp: 9345099448
youtube: @tmmkatchi-315