
14-01-2024
பத்திரிக்கை செய்தி
தமிழர்களின் மேம்பட்ட வாழ்வியலுக்கு
தை பொங்கல் வழி காட்டும்.
தமிழக முற்போக்கு மக்கள் கட்சித் தலைவர்
க.சக்திவேல்
பொங்கல் வாழ்த்துச் செய்தி
கடந்த ஓராண்டாக பல்வேறு இன்னல்களை தமிழக மக்கள் குறிப்பாக விவசாயிகள் சந்தித்து வருகின்றனர். ஒரு புறம் அண்டை மாநிலங்களின் தார்மீக மற்ற, அரசியல் சட்டத்தை மீறிய செயல்பாட்டால் காவிரி,முல்லை பெரியாறு நீர்வரத்து இன்றி தமிழக விவசாயிகள் விளைச்சல் அற்ற நிலைக்கு தள்ளப்பட்டார்கள். மறுபுறம் கடுமையான மழை வெள்ளப் பெருக்கால் விளைந்த நாசத்தால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழர்களின் தாயகமான தமிழகத்தில் விவசாயிகளின் வாழ்வாதாரங்கள் நிலையற்ற நிலையில், ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி இருந்தாலும் வறுமையும் வேலையில்லா திண்டாட்டம் மட்டுமின்றி லஞ்ச லாவண்ய மாநிலமாக தமிழகம் மாறியுள்ளது.
தமிழ்நாடும் தமிழர்களும் இத்தகைய இடர்பாடுகளில் இருந்து தங்களை விடுவித்துக்கொள்ளவும் மேம்பாட்டுக்கான வழிமுறைகளையும் புதிய அணுகு முறைகளை மேற்கொள்ள வேண்டும். அதற்கான புரிதலை இந்த தை பொங்கல் வழி காட்டும் என நம்புகிறோம்.
எனவே, தமிழ்த் தேசிய இனம் தனது தமிழ்த் தேசிய, பண்பாட்டு அடையாளங்களை மீட்டெடுக்கவும் நேர்மையான ஆட்சித் தலைமையை தமிழர்களின் தாயகமான தமிழகத்தில் உருவாக்கவும் வறுமை, வேலையில்லா திண்டாட்டத்தை ஒழிக்கவும் உறுதி ஏற்போம் என்ற நிலையில், தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் வாழ்த்துக்களை உலகம் முழுவதும் வாழ்ந்து வரும் தமிழர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
க.சக்திவேல்,
தலைவர்,
தமிழக முற்போக்கு மக்கள் கட்சி.
மின்னஞ்சல்: [email protected]
இணையதளம்: www.tmmkatchi.com
Youtube Link:
https://www.youtube.com/@tmmkatchi-315/featured
