பேராவூரணி சட்ட மன்றத் தொகுதி – 18-01-2024- நாடாளுமன்ற தேர்தல் கலந்தாய்வுக் கூட்ட தீர்மானங்கள்

தமிழக முற்போக்கு மக்கள் கட்சி

பேராவூரணி சட்ட மன்றத் தொகுதி

நாடாளுமன்ற தேர்தல் கலந்தாய்வுக் கூட்டம்.

20.01.2024 ( சனிக்கிழமை ) அன்று பேராவூரணி, இரண்டாம்புளிக்காடு,  சிவமணி விழா அரங்கில் தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின் பேராவூரணி சட்ட மன்றத் தொகுதி சார்பாக நாடாளுமன்ற தேர்தல் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின் தலைவர் க.சக்திவேல், பொதுச் செயலாளர் R.பிரபாகரன், துணைத் தலைவர் A. சுந்தர மூர்த்தி, மாநில இளைஞர் அணி செயலாளர் P. மதன் உள்ளிட்டவர்கள் கலந்துக் கொண்டனர். மாவட்டச் செயலாளர் சே. வினோத் தலைமை ஏற்க, மாவட்ட இளைஞர் அணி செயலாளர்    ர.கெளதம் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின் வருமாறு.

 

  1. காவிரியில் தண்ணீர் இல்லாததால் சம்பா சாகுபடி செய்ய முடியாத விவாசாயிகளுக்கும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும்

 

காவிரியில் தண்ணீர் இல்லாததால் சம்பா சாகுபடி செய்ய முடியாத விவசாயிகளுக்கு தமிழக அரசு ரூபாய். 50,000 இழப்பீடும் காவிரி டெல்டா மாவட்டங்களில் ஜனவரி முதல் வாரத்தில் பெய்த பேய் மழையால்  பாதிக்கப்பட்ட  விவசாயிகளுக்கும் ஏக்கருக்கு ரூபாய் 50,000 இழப்பீடு வழங்க வேண்டுமென தமிழக அரசை இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

 

  1. காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் பயிர்களும் மக்களும் பதுகாக்கப்பட வேண்டும்.

 

காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல நோக்கங்கள் தீங்கு விளைவிக்கக்கூடிய தொழிற்சாலைகளையும் பசுமை மண்டலத்திற்கு எதிரான தொழில்களையும் முற்றாக தடை செய்வதென்றாலும்   இந்த வேளாண் மண்டலத்தில் உள்ள பயிர் தொழிலைப் பாதுகாப்பதும் மக்களின் வாழ்வாதாரங்களை உறுதிப்படுத்துவதும் முழுமையான நோக்கங்களாக இருக்க வேண்டுமென இக்கூட்டம் வலியுறுத்துகிறது. அதற்காக கீழ்க் கண்டவற்றை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டுமென இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

  • காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக பாதுகாக்க மணல் குவாரிகளுக்கு முற்றிலுமாக தடை விதிக்க வேண்டும்.
  • காவேரி டெல்டா மண்டல மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, அரியலூர், கடலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் நெல், நெல்லிற்கு அடுத்தபடியாக உளுந்து மற்றும் பச்சைப்பயிறு சாகுபடி செய்யப்படுகிறதுவளமான மண், மற்றும் நிலத்தடி நீர் ஆதாரத்தினைக் கணக்கில் கொண்டு நிலக்கடலை, மக்காச்சோளம், எள், ஆகியவை பயிரிடப்படுகின்றது. எனவே, நீர் ஆதாரமே காவிரி டெல்டாவின் முதன்மையான தேவை என்பதால் காவிரி நதி நீர்ப் பங்கீட்டு உச்ச நீதி மன்ற ஆணையின் படியான காவிரி நீரைப் பெற தமிழக அரசு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மத்திய அரசும் வடிகால் மாநிலத்தின் நீர் உரிமைகளை காத்திட முன்வரவேண்டும், மேலும், பொதுவாக நீர் தேக்க முறைகளை தேவையான தடுப்பணைகள் மூலமும் நீர்த் தேக்க வழிமுறைகளையும் கையாள தமிழக அரசை இக்கூட்டம் வலியுறுத்துகிறது.
  • காவேரி டெல்டா மண்டல மாவட்டங்களில் வேறுத் தொழில்களுக்கு வாய்ப்பில்லாததால் மாவட்டத்திற்கு ஒரு வேளாண் கல்லூரிகளை அரசே திறக்க வேண்டும். ஒவ்வொரு வட்டத்திலும் வேளாண் ஆராய்ச்சிக் கூடங்களை தமிழக அரசு ஏற்படுத்த வேண்டுமென தமிழக அரசை இக்கூட்டம் வலியுறுத்துகிறது.
  • காவேரி டெல்டா மண்டல மாவட்டங்களில் வேலையற்ற இளைஞர்களுக்கு மாதம் தோறும் ரூபாய் 3,000 வழங்க வேண்டுமென தமிழக அரசை இக்கூட்டம் வலியுறுத்துகிறது.
  • காவேரி டெல்டா மண்டல மாவட்டங்களில் இடுபொருட்களையும் நவீன வேளாண் தொழிற்கருவிகளையும் இலவசமாக வழங்க  வேண்டுமென தமிழக அரசை இக்கூட்டம் வலியுறுத்துகிறது.
  • காவேரி டெல்டா மண்டல மாவட்டங்களில் அறுவடை செய்யப்படும் நெல் அத்துணையும் எந்த கட்டுப்பாடும் இல்லாமல் தமிழக அரசு கொள்முதல் செய்யப்பட வேண்டுமென தமிழக அரசை இக்கூட்டம் வலியுறுத்துகிறது.
  • காவேரி டெல்டா மண்டல பகுதியின் வளர்ச்சிக்கு வேளாண் விளை பொருள்களை மதிப்புக்கூட்டி பதப்படுத்தும் தொழிற்சாலைகளையும் வேளாண்மைக்கான இயந்திரங்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளையும் , அது தொடர்பான ஆராய்ச்சி செய்து, புத்தாக்கம் செய்வதற்கான தொழிற்சாலைகளையும் கொண்டு வர வேண்டுமென தமிழக அரசை இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

 

  1. தென்னை விவசாயிகளை பாதுகாக்க தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

 

பேராவூரணி, பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு ஆகிய பகுதிகளில் சுமார் 1.20 இலட்சம் ஏக்கரில் தென்னை விவசாயம் செய்யப்படுகிறது. ஆனால், தென்னை சார்ந்த தொழில் வளர்ச்சி இப்பகுதியில் முற்றிலுமாக இல்லை அது மட்டுமின்றி, தேங்காய், கொப்பரை இரண்டும்  குறைந்த விலைக்கே கொள்முதல் செய்யப்படுகின்றன. ரூபாய் 25க்கு விற்பனை செய்யப்பட்ட தேங்காய் இன்று ரூபாய் 10க்கே விற்கப்படுவது தென்னை விவசாயிகளுக்கு பெருத்த இழப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரள அரசு கொள்முதல் செய்வது போன்று, தமிழக அரசே தேங்காயை ரூபாய் 40 க்கு கொள்முதல் செய்ய வேண்டும்.கொப்பரை கொள்முதல் விலையை ரூபாய் 140 ஆக உயர்த்தி வழங்க தமிழக அரசு முன்வரவேண்டும்.தென்னை தொடர்பான தென்னை சார்ந்த மதிப்பு கூட்டப்பட்ட பொருள்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளை தமிழக, மத்திய அரசுக‌ள் உருவாக்க வேண்டும்.

 

 

 

  1. காவிரி டெல்டா பாராளுமன்ற தொகுதிகளில் பொதுவான வேட்பாளர்கள் நிறுத்த அனைத்து கட்சிகளும் முன் வர வேண்டும்.

 

நீரினின்றி அமையாது உலகு என்று வள்ளுவர் கூறியது யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ உறுதியாக காவிரி டெல்டா பகுதிகளுக்கு பொருந்தும். இந்த டெல்டா பகுதியில் பெருமளவில் பயிர் செய்யப்படுகிற நெற்பயிருக்கும் நீர் என்பது ஆதார சுருதியாக இருந்தாலும் குறுவை, சம்பா பயிர்களுக்கு  தேவையான நீர் என்பது தொடர்ந்து மறுக்கப் பட்டு வருகிறது. இதன் காரணமாக விவசாயம் ஒரு புறம் பாதிக்கப்படுவதோடு விவசாயிகள் எந்த வருமானமும் இல்லாமல் துன்பப்படும் நிலைக்கு தள்ளப்பட்டாலும் காவிரியில் நீர் திறந்து விட கர்நாடகத்தில் இருக்கும் எந்த அரசும் முன் வருவதில்லை. கர்நாடாகாவில் பாஜக ஆட்சியில் இருந்தாலும் காங்கிரஸ் ஆட்சியிலிருந்தாலும் தமிழகத்திற்கு காவிரி நீரைத் திறக்கக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளனர். கடந்த 2023   ஆண்டு, ஆட்சி மாறினாலும் தமிழகத்தை வஞ்சிப்பதில் அங்கே உள்ள கட்சிகள் போட்டி போட்டுக் கொண்டன. அங்கே உள்ள கன்னட இன அமைப்புகளும் தமிழகத்தை வஞ்சிப்பதில் உறுதியாக இருந்து கட்சிகள் வேறு நிலையை எடுப்பதை தடுக்கின்றன. ஆனால், தமிழகத்தில் சாதிய,மத  உணர்வு ரீதியாக கட்சிகள் இருப்பதும் இத்தகைய கட்சிகள் காவிரி டெல்டா பகுதிகளில் இல்லாததும் தமிழகத்தை வஞ்சிக்கும் கர்நாடகத்தின் நிலைப்பாட்டை பெரும்பாலான சாதிய, மதவாத கட்சிகள் எடுப்பதில்லை. மறுபுறம், தமிழகத்திலூள்ள திமுக, அதிமுக கட்சிகளின் கூட்டணி நிலைப்பாடும் கர்நாடகத்திலுள்ள‌ தேசிய கட்சிகளின் தோழமையாக இருப்பதால் காவிரி டெல்டா உரிமையை காத்திட குரல் எழுப்பக் கூட  தயங்கிய நிலையை கடந்த ஆண்டு தமிழகம் காண நேர்ந்தது. இதன் காரணமாக மத்திய அரசுக்கு எதிரான வலுவான போக்கினை வெளிப்படுத்த தமிழகம் தவ‌றிவிட்டது. இன்னிலை தொடரக் கூடாதென்றால்,  காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள பாராளுமன்ற தொகுதிகளில் பொதுவான வேட்பாளர்களை நிறுத்தப்பட வேண்டுமனவும் அத்தகைய பொதுவான வேபாளர்களை அனைத்து கட்சிகளும்  ஆதரிக்க  வேண்டுமெனவும்  இக்கூட்டம்  தீர்மனிக்கிறது.

 

  1. புதிய அரசியல் சாசன‌ சட்டம் இயற்றப்பட வேண்டும்.

 

இந்தியா என்பது தேசிய இனங்களின் கூட்டமைப்பு என்பதை மறுக்கிற அல்லது குறைந்த பட்சம் இந்தியா என்பது கூட்டாச்சி நாடு என்பதை ஏற்றுக் கொள்ளாத இந்திய அரசியல் சட்டம் என்பது இந்திய விடுதலைப் போராட்ட உணர்வுகளுக்கு எதிரானது. அதன் காரணாமாக, இந்தியாவில் மாநில உரிமைகள் பறிக்கப்பட்டு ஒற்றை ஆட்சி முறைக்கு வழிவகுத்து விட்டது. இதனால், மத்திய ஆட்சிக்கு இணங்காத மாநிலங்களுக்கு நிதி ஆதாரம் உள்ளிட்ட அனைத்து வகையிலும் வஞ்சிக்கும் வகையில் மத்திய அரசு செயல்படுகிறது. மேலும், இந்திய அரசியல் சட்டம் காரணமாக மத்திய அரசிடம் அதிகார குவியல் நடைபெற்றுள்ளது. மத்திய அரசிடம் உள்ள அதிகார குவியல் காரணாமாக இந்தி மொழித் திணிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழ் உள்ளிட்ட தேசிய மொழிகள் புறக்கணிக்கப்பட்டு இரண்டாம் தர மொழிகளாகப்படுகின்றன. இந்தி மொழிப்  பேசுவோருக்கு வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை காரணாமாக  தமிழ் உள்ளிட்ட  பிற  மொழி  பேசுவோர் வேலை வாய்ப்பற்று இருந்திடும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.  இந்நிலை மாறிட, தேசிய மொழிகளின் கூட்டாச்சி இந்தியாவில் ஏற்படும் வகையில் புதிய அரசியல் சாசன‌ சட்டம் இயற்றப்படுவதை இந்தத் தேர்தலில் தமிழக முற்போக்கு மக்கள் கட்சி முன்னிலைபடுத்துவது என்று தீர்மானிக்கிறது.

 

  1. தமிழ்நாட்டு உரிமைகளுக்கு எதிரான கட்சிகள் தோற்கடிக்க‌ப்பட வேண்டும்.

 

காவிரி, முல்லைப் பெரியாறு, தென்பெண்ணை உள்ளிட்ட தமிழக ஆறுகளின் உரிமைகளை தொடர்ந்து அண்டை மாநிலங்கள் மறுத்து வருகின்றன. மேலும், இந்தி மொழியை திணிக்க பல்வேறு வகைகளில் தொடர்ந்து பல மத்திய அரசுகள் செயல்பட்டு வருகின்றன. வேலை வாய்ப்புகளிலும் பொருளாதார முதலீடுகளிலும் தமிழ்நாடு புறக்கணிக்க‌ப்படுகிறது. இத்தகைய நிலைப்பாட்டிற்கு அரசியல் கட்சிகளின் அடிப்படை கோட்பாடுகளும் அரசியல் லாபங்களும் காரணமாக அமைந்துள்ளன. எனவே, தமிழ்நாட்டு உரிமைகளுக்கு எதிரான நிலைப்பாடு எடுக்கும் கட்சிகளையும் அவற்றிற்கு ஆதரவான நிலைப்பாடு எடுக்கும் தமிழக கட்சிகளையும் இந்த பாராளுமன்றத் தோற்கடிக்கப்பட வேண்டுமென இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

 

 

 

 

https://www.facebook.com/share/v/UmeEhA3kUZkwVJ59/?mibextid=xfxF2i

Author: Secretary, TMMK

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *