சிறப்பு தீவிர வாக்காளர் திருத்த (SIR) குறித்து 2.11.2025 அன்று சென்னையில் கூடிய அனைத்துக் கட்சி கூட்டத்தில் தமிழக முற்போக்கு மக்கள் கட்சி பங்கேற்பு

சிறப்பு தீவிர வாக்காளர் திருத்த (SIR) குறித்து திமுக 2.11.2025 அன்று சென்னையில் கூட்டிய அனைத்துக் கட்சி கூட்டத்தில் தமிழக முற்போக்கு மக்கள் கட்சி சார்பாக தலைவர் க.சக்திவேல் கலந்துகொண்டார் . இந்தக் கூட்டத்தில் இந்த சிறப்பு தீவிர திருத்த செயல்முறைகள் அரசியல் சட்டத்திற்கு எதிரானது மட்டுமின்றி இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரத்துக்கு அப்பாற்பட்டது என்பதையும் இந்த நடவடிக்கை மூலமாக இந்திய மக்களின் குடியுரிமையை கேள்விக்குறியாக்கி உள்ளது. எனவே, அனைத்து கட்சி கூட்டத்தின் வரைவு தீர்மானத்தில் இருந்த இந்த SIR அவசரகதியில் நிறைவேற்றாமல் தேர்தலுக்குப் பின்னர் செயல்படுத்தலாம் என்று இருந்ததை மாற்றம் செய்த வேண்டுமென தமிழக முற்போக்கு மக்கள் கட்சி வலியுறுத்தியது. மேலும், மாநில தேர்தல்களை பொறுத்த வரை, மாநில அரசே வாக்காளர் பட்டியல் குறித்த சட்டங்களை இயற்ற முடியும் என்பதை சுட்டிக்காட்டி, தமிழக அரசே இந்த SIR யை அரசாணை வழியாக நிறுத்தி வைத்திட இயலும் என்பதை கூறி, தமிழக அரசு உடனடியாக சட்டமோ அல்லது அரசாணையோ பிறப்பிக்கலாம் என்றும் தமிழக முற்போக்கு மக்கள் கட்சி எடுத்துரைத்து. மேலும், உச்ச நீதிமன்றத்திற்கு செல்வதற்கு முன்பாக தமிழக அரசு தனக்கு இருக்கக் கூடிய அதிகாரத்தை பயன்படுத்த வேண்டுமென்பதையும் தமிழக முற்போக்கு மக்கள் கட்சி வலியுறுத்தியது. உச்ச நீதிமன்றம் செல்வது குறித்து தனித்தனியாக கட்சிகளின் விருப்பத்தின் பெயரில் செல்லலாம் என்பதையும் எடுத்துரைத்தோம். இது தவிர, இந்த SIR ஏதோ, சிறுபான்மை மக்களுக்கு எதிராக மட்டும் என்பது வரைவு தீர்மானத்தில் குறிப்பிட்டுள்ளது ஆனால் இது சாமானிய மக்களுக்கு எப்படி எதிராக உள்ளது என்பதை நீர்நிலை, மேய்ச்சல், அரசு புறம்போக்குகளில் பல்லாண்டு காலமாக வாழ்ந்த மக்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றிய நிலையில் வாக்காளர் பட்டியலில் அவர்கள் பெயர் இருந்தும் வீடற்ற நிலையில் அவர்களை எப்படி கணக்கில் எடுத்துக் கொள்வீர்கள் என்பதையும் சுட்டிக் காட்டி SIR குறித்த பேராபத்தை தமிழக முற்போக்கு மக்கள் கட்சி எடுத்துரைத்து இதுப்பற்றியும் தீர்மானத்தில் இணைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியது. தீர்மானத்தின் அடிப்படையை கொள்கையளவில் ஏற்றுக் கொண்ட நிலையில், இறுதித் தீர்மானத்தின் வடிவத்தில் சில மாற்றங்களை காண முடிந்தது. கூட்டத்தில் அனைவரது கருத்துகளையும் முன்வைத்திட வாய்ப்பு அளிக்கப்பட்டது எதிர் கருத்துகளையும் வைத்திட எந்த தடையுமின்றி முறைப்படி நடைபெற்றது வரவேற்க கூடியது. ஒரே குறைபாடு அரசியல் கட்சிகள் மட்டுமின்றி தங்களுக்கு வேண்டிய அமைப்புக்களையும் அழைக்கப்பட்டிருந்தது தான்.

Author: Secretary, TMMK

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *