வரலாறு
மக்கள் மாநாடு என்ற அமைப்பு செப்டெம்பர் 2005- ல் தொடங்கப்பட்டது. தமிழகத்தின் பல ஊர்களில் நடைபெற்ற கூட்டங்களைத் தொடர்ந்து , அரசியல் அமைப்பாக மாற்றுவது தான் மக்கள் மாநாடு கொள்கைகளை விரைவாகவும் , உறுதியாகவும் மக்களிடம் கொண்டு செல்ல இயலும் என்ற அடிப்படையில் 2006 சனவரியில் மக்கள் மாநாடு கட்சி அரசியல் அமைப்பாக மாற்றப்பட்டு, 2017ம் ஆண்டு தமிழக முற்போக்கு மக்கள் கட்சி என்று இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டு செயல்பட்டு வருகிறது. சாமன்ய மக்கள் அதிகாரத்திற்கு வரவேண்டுமென்றால் அரசியல் எளிமைப்படுத்த வேண்டுமென்ற அடிப்படையில் நம்பிக்கை கொண்டு செயல்பட்டு வருகிறது தமிழக முற்போக்கு மக்கள் கட்சி.இதனைத் தொடர்ந்து, தமிழ் நாட்டின் பல்வேறு இடங்களில் கட்சியின் கொள்கை விளக்கக் கூட்டங்கள், நிகழ்ச்சிகள் நடை பெற்று வருகின்றன.
சில குறிப்பிடத்தக்க நிகழ்வுகள்
தமிழக இரயில்வே பகுதிகளை பாலக்காடு இரயில்வே கோட்டத்துடன் இணைப்பதைக் கண்டித்தும் , தமிழ் வளமும் செழுமையும் சீர்திருத்தக் கருத்துக்களும் இல்லாத மொழி என்று கவிஞர் அப்துல் ரகுமானை மத்திய அரசின் தமிழ் செம்மொழி ஆணைய உறுப்பினர் பதிவியிலிருந்து நீக்கக் கோரியும் 2007 நவம்பர் 1 ஆம் தேதி சென்னையில் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
01 . 02 . 2008 அன்று கடலூர் நகர் மன்றத்தில் மக்கள் மாநாடு கட்சி சார்பாக தமிழர்களின் பொருளாதார இறையாண்மை மாநாடு நடை பெற்றது. நாடாளு மன்றம் , சட்ட மன்றம் , நீதித்துறை , இந்திய அரசு பணிகளில் மொழி வாரி அடிப்படையில் இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் , தமிழ் நாட்டில் எல்லா துறைகளிலும் தமிழர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படவேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்களை இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.
மதுரை மாவட்டம் வளையங்குளம் , எலியார்பத்தி , நல்லூர் , சோளங்கருனரி கிராமங்களில் சிப்காட் சிறப்பு பொருளாதார மண்டலம் ஏற்படுத்த தமிழக அரசு நிலம் கையகப்படுத்துவதைக் கண்டித்து , அந்தப் பகுதி விவசாயிகளை ஒன்று திரட்டி சிறப்பு பொருளாதார மண்டலத்தை திரும்பப் பெற வலியுறுத்தி கட்சி மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்தை 2008 மார்ச் 17 ஆம் தேதியன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடத்தியது. அதனைத் தொடர்ந்து நடை பெற்ற பல போராட்டங்களுக்குப் பின்னர் , சிறப்புப் பொருளாதார மண்டலம் திரும்பப்பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா குன்னூர் கிராமம் பள்ளியினை மீண்டும் செயல்படக் கோரி புதுக்கோட்டையில் 9-6-2008 அன்று கட்சி சார்பாக உண்ணாவிரதப் போராட்டம் நடை பெற்றது.பெட்ரோலிய பொருள்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வைக் கண்டித்து மக்கள் மாநாடு கட்சி சார்பாக தஞ்சாவூரில் 2008 , ஜூன் 19 ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 2013ல் தமிழர் ஒற்றுமை மாநாட்டையும் கட்சி ஏற்பாடு செய்து நடத்தியது.
தமிழகத்தை தூய்மையான மாநிலமாக மாற்ற வேண்டுமென்பதற்காக குறிப்பாக லோக் ஆயுக்தா கொண்டு வருவதற்காக 2014லிருந்து பல்வேறு நடவடிக்கைகளை இவ்வியக்கம் மேற்கொண்டு வருகிறது.லோக் ஆயுக்தா சட்ட முன் வடிவை மக்கள் மாநாடு கட்சி 18-1-2014 அன்று சென்னையில் வெளியிட்டது, இந்த வரைவுச் சட்டம் தொடர்பான மக்கள் கருத்துக்களைத் திரட்டி, லோக் ஆயுக்தா சட்டத்தை நிறைவேற்றி, அமைத்திட தமிழக அரசை வலியுறுத்திடும் கையெழுத்து இயக்கத்தை கட்சி 2014ஆம் ஆண்டு பிப்ரவரி,மார்ச் மாதங்களில் நடத்தியது. இந் நிகழ்வுகளின் தொடர்ச்சியாக, ஊழலைப் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவது தான் ஊழலை ஒழிப்பதற்கான நிரந்தர தீர்வாக அமைந்திடும் என்கிற அடிப்படையிலும் லோக் ஆயுக்தா மற்றும் சேவைப் பெறும் உரிமைச் சட்டத்தை தமிழகத்தில் உடனடியாக நிறைவேற்றிட வலியுறுத்தியும் 2015 ஏப்ரல் 18 முதல் 2015 ஏப்ரல் 29 வரை கன்னியாகுமரியிலிருந்து மதுரை வரை நடைபயணம் மேற்கொண்டது.ஊழலுக்கு எதிரான போராட்டமாக லோக் ஆயுக்தா மற்றும் சேவைப் பெறும் உரிமைச் சட்டத்தை தமிழ்நாட்டில் உடனடியாக நிறைவேற்றிட வலியுறுத்தி 19,20,21 சனவரி, 2016 தேதிகளில் மூன்று நாள் உண்ணாவிரதப் போராட்டத்தை சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டத்தில் கட்சி நடத்தியது. அந்த வகையில், ஊழலுக்கு எதிராக சபதமேற்கும் பொதுக்கூட்டத்தை 12-03-2016( சனிக்கிழமை) மாலை 6 மணிக்கு சென்னை மயிலாப்பூர் மாங்கொல்லையில் நடத்தியது. இந்தப் பொதுக்கூட்டத்தில், உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞரும் ஊழல் ஒழிப்புப் போராளியுமான திரு. பிரசாந்த் பூசன் கலந்துக் கொண்டு சிறப்புரையாற்றினார்.
30.09.2023 அன்று காவிரி நீரை மறுக்கும் கர்நாடக காங்கிரஸ் அரசையும், மத்திய பாஜக அரசையும் செயல்படாத தமிழக திமுக அரசையும் கண்டித்து சென்னை ராஜாரத்தினம் அரங்கம் எதிரே மாபெரும் கண்டன ஆர்பாட்டத்தை தமிழக முற்போக்கு மக்கள் கட்சி நடத்தியது. அதனைத் தொடர்ந்து தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் பட்டுக்கோட்டை தலைமை அஞ்சலகம் முன்பு காவிரி நீர் உரிமையில் தமிழகத்தை வஞ்சிக்கும் கர்நாடக,மத்திய அரசுகளையும் காவிரி நீர் பெற்று தர திராணியற்ற தமிழக திமுக அரசையும் கண்டித்து 6.10.2023 அன்று கண்டன ஆர்பாட்டத்தை தமிழக முற்போக்கு மக்கள் கட்சி நடத்தியது.
தேர்தல் பயணங்கள்
கட்சியானது 2009 பாராளுமன்ற தேர்தல் துவங்கி தொடர்ந்து நடைபெற்று வரும் அனைத்துத் தேர்தல்களிலும் போட்டியிட்டு வருகிறது. 2009 ஆம் ஆண்டு நாடளுமன்றத் தேர்தலில் மத்திய சென்னை, வடசென்னை, சிவகங்கை, திருச்சி, பெரம்பலூர், தர்மபுரி, வேலுர் ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டது. 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் வில்லிவாக்கம், அண்ணாநகர், ஆர்.கே நகர், சைதாபேட்டை, வேளச்சேரி, ஆலந்துர், தாம்பரம், சோழிங்கநல்லுர், அணைக்கட்டு, கீழ்வேளூர் ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டது. 2014 ஆம் ஆண்டு நாடளுமன்றத் தேர்தலில் மத்திய சென்னை, வடசென்னை, சிவகங்கை, கோயம்புத்துர், திருப்பூர், ஊட்டி, நாகபட்டினம், சேலம் ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டது. 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் வேளச்சேரி, சிவகங்கை, காரைக்குடி, திருப்பரங்குன்றம், சிவகாசி, மதுரை கிழக்கு, மதுரை வடக்கு, மானாமதுரை, நன்னிலம் ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டது.2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் திருப்பெரும்புதூர் தொகுதியில் போட்டியிட்டது.
புதிய வடிவத்தில் தமிழகத்தின் புதிய குரலாக தமிழக முற்போக்கு மக்கள் கட்சி களத்தில் நிற்கிறது. தமிழக மக்களின் முழுமையான ஆதரவைப் பெறுவதற்காக தன்னை அர்பணித்துக்கொண்டு செயல்பட்டு தமிழக மக்களின் புதிய நம்பிக்கையாக தமிழகத்தின் மாற்றத்தின் கருவியாக தமிழக முற்போக்கு மக்கள் கட்சி திகழும் என்பது உறுதி. இந்த மாற்றத்திற்கான பயணத்தில் தங்களையும் இணைத்துக்கொள்ளுமாறு தமிழக மக்களை இருகரம் கூப்பி அழைக்கிறோம்.
மேலும் எங்களைப் பற்றி அறிந்திட
Website : www.tmmkatchi.com
Youtube : https://www.youtube.com/@tmmkatchi-315
Email : [email protected]
Read the TMMK history in English
https://en.wikipedia.org/wiki/Tamizhaga_Murpokku_Makkal_Katchi
க.சக்திவேல்
வழக்கறிஞர், எழுத்தாளர், பேச்சாளர், ஆய்வாளர்,
தலைவர், தமிழக முற்போக்கு மக்கள் கட்சி.
தஞ்சை மாவட்டம் ஓரத்தநாட்டை சொந்த ஊராக கொண்டவருமானவரும் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகில் உள்ள பாலைவனம் சிற்றூரை பூர்வீகமாகக் கொண்டவர். பள்ளிப் படிப்பை ஓரத்தநாடு, சென்னை என இரு இடங்களிலும் மேற்கொண்டு, சென்னை விவேகானந்தா கல்லூரியில் இளங்கலை வ்ணிகவியலும், சென்னை மாநிலக் கல்லூரியில் முதுகலை வ்ணிகவியலும் பின்னர் சென்னை சட்டக் கல்லூரியில் சட்டக் கல்வியும் பயின்றார். சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார்.
மாணவர் தலைவர்
விவேகானந்தா கல்லூரி, மாநிலக் கல்லூரி ஆகிய இரண்டுக்கல்லூரிகளிலும் மாணவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு செயல்பட்டார். மாநிலக் கல்லூரியில் மாணவர் தலைவராக செயல்பட்ட போது அன்றைய தினம் இலங்கை அதிபராக இருந்த செயவர்த்தனேவின் இந்திய வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்க சென்னையில் உள்ள அனைத்துக் கல்லூரி மாணவர்களையும் ஒன்று திரட்டி மாபெரும் ஊர்வலத்தை நடத்தினார்.
சென்னை சட்டக் கல்லூரியில் பயின்ற போது ஈழ ஆதரவு நிகழ்ச்சிகளை நடத்தியதோடு திம்பு பேச்சு வார்த்தைக்கு பின்னர் காவலில் வைக்கப்பட்டு இருந்த திரு. பிரபாகரன் உள்ளிட்டவர்கள் விடுதலைக்கான போராட்டங்களை தலைமை தாங்கி நடத்தினார். அது தவிர, திரு.வி.பி. சிங் மேற்கொண்டஊழலுக்கு எதிரான பிரச்சாரத்திற்கு உறுதுணையாக சென்னையில் மாணவர்களை திரட்டி இவர் தலைமையில் மாநாடு நடத்தப்பட்டது. அம் மாநாட்டில் திரு.வி.பி. சிங் கலந்துக் கொண்டார்.
வழக்கறிஞர்
எட்டு வழிச் சாலை, கரொனா ஊரடங்கு காலத்திய கட்டுபாடுகளுக்கு எதிராகவும், நேர்மையான தேர்தல் நடைமுறைகளுக்காகவும் குற்ற வழக்குகளில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள திரு.செந்தில் பாலாஜியை பதவிலிருந்து நீக்கிட தொடரப்பட்ட உள்ளிட்ட பொது நல வழக்குகளில் வாதாடியவர்.
எழுத்தாளர்
2004 – காமாராசரின் பொற்கால ஆட்சி
2005 – உலக மயமாக்கம் ஒர் அடிமை பொருளாதரம்,
2010 – தமிழ்நாடு தமிழருக்கே
ஆய்வாளர்
ஆற்றியுள்ள ஆய்வுரைகளின் தலைப்புக்கள்.
- தேசிய இனங்களின் வரலாறே உலக வரலாறு
- கால்டுவெலின் தமிழருக்கு எதிரான போக்கு
- 2017 டிசம்பர் 16 & 17 தேதிகளில் மலேசியா நாட்டில் கிள்ளான் நகரில் நடைபெற்ற உலகத் தமிழர் தேசிய இன மீட்சி மாநாட்டில் கலந்துக்கொண்டு “தமிழர்களின் இறையாண்மை” என்ற ஆய்வுரையை வழங்கினார்.
- விஜயநகர ஆட்சிக்கு முன்னும் பின்னரும்
- பாட்டாளி மக்கள் கட்சி 2020ஆம் ஆண்டு நடத்திய சமூக நீதி வாரத்தில் கலந்துக் கொண்டு ” இட ஒதுக்கீடு ஒரு வரலாற்றுப் பார்வை” என்ற பொருளில் ஆய்வுரை வழங்கினார்.
- களப்பிரர் ஆட்சி
இன்னும் பல்வேறு தலைப்புகளில் தமிழ்த் தேசியம் தொடர்பான ஆய்வுரைகளை வழங்கியுள்ளார்
அரசியல் பயணம்
1990 ஆம் ஆண்டு தமிழக இளைஞர் ஜனதா தளத்தின் மாநிலத் தலைவர். பின்னர் 1994 ஆம் ஆண்டு காங்கிரசு கட்சியில் இணைந்து, 1996 ஆம் ஆண்டு நடைப்பெற்ற சட்டமன்றத் தேர்தலில் பேரவூரணி தொகுதியில் காங்கிரசு சார்பில் போட்டியிட்டார். தமிழக காங்கிரசு பொதுச்செயலாளராக 1996லிருந்து 2004 வரை செயல்பட்டார். அகில இந்திய காங்கிரசு கமிட்டி உறுப்பினராகவும் பதவி வகித்தார். காங்கிரசு கட்சியின் பொருளாதாரக் கொள்கை ஏற்புடையின்மை காரணமாக, காங்கிரசை விட்டு விலகினார். பின்னர், மக்கள் மாநாடு என்ற அமைப்பை ஏற்படுத்தினார், அதுவே, மக்கள் மாநாடு கட்சி என்ற அரசியல் கட்சியாக இந்திய தேர்தல் ஆணையத்தில் முறையாக பதிவு செய்யப்பட்டு, 2017ல் தமிழக முற்போக்கு மக்கள் கட்சி எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு செயல்பட்டு வருகிறது.
Recent Comments