 
                 புதிய பார்வை கூட்டணி
புதிய பார்வை கூட்டணிமுகப்பு
தமிழகத்தின் மீதும் தமிழக மக்களின் மீதும் உண்மையான பற்று கொண்டு பல வருடங்களாக மக்களுடன் மக்களுக்கான செயல்பாடுகளில் தம்மை உண்மையாக ஈடுபடுத்தி கொண்டு செயல்பட்டு வரும் கட்சிகள் நாங்கள். ஆரம்பிக்கப்பட்ட சூழல் வெவ்வேறு இருக்கலாம் ஆனால் சந்திக்க கூடிய களம் என்பது ஒன்று தான் என்பதனை புரிந்து கொண்டு தமிழக மக்களிற்கு நேர்மையான மக்கள் விரும்பும் நல்லாட்சியை மக்களாட்சியை வழங்க தனித்தனியாக செயல்பட்டு வந்த நாங்கள் ஒன்றிணைந்து புதிய பார்வை கூட்டணி துவங்கியுள்ளோம்.
எங்களைப்பற்றி:
தமிழகத்தின் மீதும் தமிழக மக்களின் மீதும் உண்மையான பற்று கொண்டு பல வருடங்களாக மக்களுடன் மக்களுக்கான செயல்பாடுகளில் தம்மை உண்மையாக ஈடுபடுத்தி கொண்டு செயல்பட்டு வரும் கட்சிகள் நாங்கள். ஆரம்பிக்கப்பட்ட சூழல் வெவ்வேறாக இருக்கலாம் ஆனால் சந்திக்க கூடிய களம் என்பது ஒன்று தான் என்பதனை புரிந்து கொண்டு தமிழக மக்களிற்கு நேர்மையான மக்கள் விரும்பும் நல்லாட்சியை மக்களாட்சியை வழங்க தனித்தனியாக செயல்பட்டு வந்த நாங்கள் ஒன்றிணைந்து புதிய பார்வை கூட்டணி துவங்கியுள்ளோம். ஒற்றை கருத்துடைய மக்களுக்காக செயல்பட்டு வரும் கட்சிகள்/அமைப்புகள்/சமூக ஆர்வலர்கள் அனைவரும் இணைந்து பணியாற்ற நாங்கள் ஒரு பாலமாக இருப்போம்.
இலக்கு :
அதிகாரம் மிகவும் வலிமையானது அதை அடைந்தால் எல்லாம் எளிமையானது என்பதை உணர்ந்து வர இருக்கின்ற 2021 சட்டமன்ற தேர்தலில் புதிய பார்வை கூட்டணியின் சார்பாக 234 தொகுதியிலும் போட்டியிட்டு மாற்றம் என்பது வெறும் சொல் அல்ல செயல் என்பதை உண்மை ஆக்குவதே இலக்கு.
கொள்கைகள் :
*       பூரண மது விலக்கு
*       லஞ்சம் ஊழல் இல்லா வெளிப்படையான நிர்வாகம்
*       கல்வி, மருத்துவம் அனைவருக்கும் இலவசம்.
*      விவசாயத்திற்கு முன்னுரிமை அளித்து, இயற்கை விவசாயத்தை  ஊக்குவித்தல்,பாரம்பரிய விதைகளை பாதுகாத்தல்.
*      அனைவருக்கும் உணவு, உடை, உறையுள் அடிப்படையாக்குதல்.
*     விளை பொருட்களை அரசே நேரடியாக கொள்முதல் செய்தல்.
*     அனைத்து அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளை உலகத்தரமாக்குதல்.
*   விளையாட்டு துறையை மேம்படுத்தி சிறந்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை உருவாக்குதல்.
*   அனைத்து வகைகளிலும் பயன்தரக்கூடிய புதிய கண்டுபிடிப்புகளை அங்கீகரித்து பயன்பாட்டுக்கு கொண்டுவருதல்
*  அனைத்து அரசு மருத்துவ மனைகளையும் உலகத்தரமாக்குதல்
*  ஆரம்ப சுகாதார நிலையங்களை தரம் உயர்த்தி பாராமரித்தல்.
*   சுகாதாரமான கழிப்பிட வசதி மற்றும் திடக்கழிவு மேலாண்மை முறைப்படித்திட வழிவகை செய்தல்.
*  தமிழகத்தை தூய்மையான மாநிலமாக உருவாக்குதல்.
*  தரமான கல்வி, குடிசைகளற்ற, தூய்மையான , தன்னிறைவு பெற்ற வளமான சீர்மிகு தமிழகத்தை உருவாக்குதல்.
     
    
வித்தியாசமான கொள்கைகளை கொண்ட கட்சியாக தெரிகிறது