கோவை ரயில் நிலையம் பகுதியில் தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. கட்சியின் மாநில தலைவர் வழக்கறிஞர் சக்தி வேல் இதனை வெளியிட்டார்.

Courtesy: Neethi Vellum 

கோவை ரயில் நிலையம் பகுதியில் தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. கட்சியின் மாநில தலைவர் வழக்கறிஞர் சக்தி வேல் இதனை வெளியிட்டார்.

கோவை ரயில் நிலையம் பகுதியில் உள்ள தனியார் உணவக அரங்கில் இன்று, தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின் தேர்தல் அறிக்கைகள் வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இக்கட்சியின் மாநில தலைவர் வழக்கறிஞர், எழுச்சி புயல் சக்தி வேல், மற்றும் இக்கட்சியின் மாநில துணை தலைவரும் வழக்கறிஞருமான புஸ்பாணந்தம் ஆகியோர் வெளியிட்டனர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய வழக்கறிஞர் சக்தி வேல் கூறியதாவது..
தமிழகத்தில் காங்கிரஸ், திமுக, அதிமுக, என பல்வேறு கட்சிகள் இந்தியா விடுதலை பெற்ற நாள் முதல் ஆண்டு வருகின்றனர். ஆனாலும் இதுவரை தமிழகத்தில் 8 கோடி பேர் உள்ள நிலையில், 6 கோடி மக்கள் இன்னமும், ஏழ்மை நிலையில் தான் உள்ளனர். 70 சதவிகிதம் பேர் நம்பி இருக்க கூடிய வேளாண்மை துறை, மிகபெரிய சரிவை சந்தித்து உள்ளது. தமிழகத்தின் நீர் ஆதாரமாக உள்ள பல ஆறுகளை இன்னமும் அரசுகள் இணைக்க பட வில்லை, இந்த நிலையில் தமிழக முற்போக்கு மக்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் நீண்ட கால பிரச்சனையான கச்சதீவு ஒப்பந்தத்தை ரத்து செய்ய உரிய நடவடிக்கை எடுக்க படும் எனவும், தமிழகத்தின் நீர் பாசன திட்டங்களை மத்திய அரசின் உதவியுடன் உடனுக்குடன் நிறைவேற்ற படும், தமிழகத்தில் உள்ள சிறு குறு தொழில் களை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க படும், வேலையில்லா திண்டாட்டத்தை தவிர்க்க, இளைஞர்களின் புதிய புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவித்து, புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க படும் எனவும், பிற மாநல மக்கள் தமிழகத்தில் அசையா சொத்துகளை வாங்க தடை விதிக்க படும் என்பது போன்ற பல்வேறு திட்டங்களை நிறைவேற்றுவதாக தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளதாக கூறினார்..
இந்த இக்கட்சியில் இக்கட்சின் வேட்பாளர்கள் மீனாட்சி சுந்தர், மகேஷ்குமார், வழக்கறிஞர் குமாஸ்தாக்கள் பால்ராஜ், ஜான், லெட்சுமி, ஜெபா, கார்த்திகா, திருவள்ளுவர் நகர் இராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

The featured image (which may only be displayed on the index pages, depending on your settings) was randomly selected. It is an unlikely coincidence if it is related to the post.

Author: admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *